தனுஷ் கையில் கட்டியிருக்கும் இந்த கடிகாரத்தின் விலை: எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் தனுஷ்.
கடந்த சில நாட்களாக தனுஷிற்கு திருமண முறிவு, நயன்தாரா குற்றச்சாட்டு என அடுக்கடுக்காக பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கின்றன.
இதற்கிடையில், படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் தனுஷ், இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
அந்த திருமண விழாவிற்கு நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டனர்.
தனுஷ் மீது நயன்தாரா அவ்வளவு பெரிய குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில் இருவரும் எதிர்பாராமல் சந்தித்துக்கொண்ட நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த சண்டையெல்லாம் ஒரு பக்கம் இருக்க தனுஷ் , சிவகார்த்திகேயன் பேசிக்கொண்ட புகைப்படமும் வைரலானது.
ஏற்கெனவே இருவரும் சண்டையில் இருப்பதாக செய்திகள் பரவிய நிலையில் இருவரும் திருமண நிகழ்ச்சியில் பேசிக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவியது.
அந்த புகைப்படத்தை தனுஷ் ஒரு கைக்கடிகாரத்தை கட்டியிருப்பார். அது அவருடைய தோற்றத்திற்கு மிகவும் எடுப்பாக இருந்தது.
அதேசமயம் அதன் விலையுமே மலைக்க வைக்கும் அளவுக்குதான் இருக்கிறது.
அப்படி தனுஷ் தன் கையில் கட்டியிருக்கும் வாட்சின் பெயர் Rolex Day- Date.
இதன் விலை 1,35,09,000 ருபாய் என்று சொல்லப்படுகிறது. அதாவது 1.35 கோடியாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |