நாய்கள் ஏன் மனிதர்களின் செருப்பை கடிக்கிறது தெரியுமா? காரணம் இதுதான்
இயற்கையாக நட்புடன் பழகும் குணத்தை கொண்ட நாய்கள் செய்யும் செயல்கள் பலவும் வேடிக்கையாக இருக்கும்.
அதேபோல் சில நாய்கள் செய்யும் இந்த விஷயங்கள் நமக்கு எரிச்சலூட்டும்.
நாய்கள் பொதுவாக இரவு நேரத்தில் கார், பைக்கை வேகமாக துரத்தும். மேலும் செருப்புகளை பார்த்தாலே கடிக்கும்.
ஆனால் நாய்களின் இந்த செயல்களுக்கு பின்னால் ஏதோ காரணங்கள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
நாய்கள் மனிதனின் காலணிகளை அல்லது துணிகளை கடித்து கிழிப்பதற்கு காரணம் அது அந்த நபரை நேசிப்பதாக அர்த்தம்.
அவர்களின் நறுமணம் பிடித்ததால் அதை தக்க வைத்து கொள்ள இது போன்ற செயல்களின் ஈடுபடும்.
நாய்கள் ஒருவரை பிரிந்து வேதனையில் வாடுவதால் அவர்களின் பிரிவை சரி செய்வதற்காக இது போன்ற செயல்களின் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
பல சமயங்களில் கடுமையான பசியின் காரணமாகவும் நாய்கள் காலணிகளை மெல்வதை வாடிக்கையாக வைத்துள்ளது.
நாய்கள் வயிற்றில் புழுக்கள் இருந்தாலும், அவை இந்த பழக்கத்திற்கு ஆளாவதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |