உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி பற்றி உங்களுக்குத் தெரியுமா?
உயரமான நீர் வீழ்ச்சி தென் அமெரிக்க கண்டத்திலுள்ள வெனிசுலா நாட்டிலுள்ள ” ஏஞ்சல்” நீர்வீழ்ச்சியாகும்.
சுமார் 979 மீற்றர் உயரமுள்ள இந்த நீர்வீச்சியில் இருந்து ஒரு துளி தரையை அடைய 14 விநாடிகள் எடுக்கின்றன. இவ் நீர் வீழ்ச்சி ” Tepui (தெபுய்) ” எனும் செங்குத்து மலைச்சரிவினூடாக பாய்கிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ் நீர்வீழ்ச்சி நீரைப்பாய்ச்சி வருகிறது. ஆரம்பத்தில் இவ் நீர்வீழ்ச்சியை அவ் இடத்தை அண்டிய செவ்விந்தியர்கள் ” Churun Meru ( சுருன் மேரு) ” என்று அழைத்தார்கள்.
1935 ஆம் ஆண்டு, அமெரிக்க விமானியான ஜிம்மி ஏஞ்சல் என்பவர் தங்கத்தை தேடி மலைகளின் மேல் பறந்து தெரிந்த போது இவ் நீர்வீழ்ச்சியைகண்டு அதை உலகின் பார்வைக்கு கொண்டுவந்தார்.
அதனால் ” ஏஞ்சல்” என்ற பெயருடன் அவரின் நினைவாக இந்த நீர்வீழ்ச்சி இன்றுவரை அழைக்கப்படுகிறது. இறைவன் படைத்ததில் எண்ணற்ற அதிசியங்கள் உலகத்தில் இருக்கிறது . அதில் இதுவும் ஒன்றாகவே கருதப்படுகிறது.