கடல் சீற்றத்தால் அழிந்த நகரங்கள் என்ன தெரியுமா?
கடல் சீற்றத்தால் அழிந்து போன நகரங்கள் என்ன என்பதை அறிந்து கொள்வோம்.
தோனீஸ் (Thonis)
எகிப்து கி.மு 12 ஆம் நூற்றாண்டில் அலெக்ஸாண்டிராவிற்கு அருகாமையில் இருந்த ஒரு துறைமுக நகரம் தான் தோனீஸ்.
கி.மு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுகளில் மிகப் பெரிய ஆதிக்கத்துடன் இருந்த இந்த நகரம், ஒரு இயற்கை பேரழிவில் கடலுக்குள் மூழ்கிப் போனது. கடந்த 2000 வருடம் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் தான் இந்த நகரத்தை மீண்டும் கண்டுப்பிடித்தார்.
ஹேலைக்
கிரீஸ் கி.மு. 373 ஆம் ஆண்டு பூகம்பம் மற்றும் சுனாமியின் ஒரு சேர்ந்தத் தாக்கத்தினால் அழிந்தப் போனது ஹேலைக் (Helike) எனும் இந்த நகரம். அன்றையக் காலத்தில் இந்நகரம் ஒரு கலாச்சார வழிப்பாட்டுத் தளமாக இருந்திருக்கிறது.
தனுஷ்கோடி
தனுஷ்கோடி கடந்த 1964 ஆம் ஆண்டு கடலில் ஏற்பட்ட பெரும் கடல் சூறாவாளியால் முற்றிலுமாக அழிந்துப் போனது இந்த துறைமுக நகரம். இப்போது அரசாங்கத்தினால் மக்கள் வாழ தடைவிதிக்கப்பட்ட நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கண்டம்
குமரி கண்டம் இது நகரம் அல்ல, மனித உயிரினம் தோன்றிய மாபெரும் கண்டம். நாகரீகத்தை வளர்த்த மண்.
உலகின் முதல் மொழியாக நமது உயர் தனி செம்மொழி தமிழ் பிறந்த மண். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எண்ணிப் பார்க்க முடியாத ஒரு மாபெரும் தொடர் இயற்கை சீற்றத்தினால், இப்போது இந்திய பெருங்கடலின் உள் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது குமரி கண்டம்.
பூம்புகார், தமிழ்நாடு
பழங்கால துறைமுக நகராக, காவிரி கரையில் அமைந்து காவிரிப்பூம்பட்டினம் என்று அழைக்கப்படுகிறது.
சோழ அரசர்களின் தலைநகராக, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றின் பிறப்பிடமாக இருந்துள்ளது. கி.பி., 500ல் கடல் புயலால் பாதிக்கப்பட்டு நகரம் அழிந்தது. கடற்கரையோரத்தில் புத்தர் சிலைகள், ரோமன் நாணயங்கள் மற்றும் பிற நாட்டின் குறிப்புகள், பழங்கால கிணறுகள் உள்ளிட்டவை எச்சமாக மிஞ்சியுள்ளன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022