உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம்! எங்கு உள்ளது தெரியுமா?
உலகின் நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் அமைந்துள்ளது. இந்தப் பாலம் தென்மேற்கு சாங்குயிங் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
ஒர்டோவியன் பார்க்கில் அமைந்திருக்கும் இந்தப் பாலத்தின் அமைப்பு கடினமான அடர்த்தியான கேபிள்களால் ஆனது.
2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன.
மத்திய ஹூனான் மாகாணத்தில் அமைக்கப்பட்ட இந்தப் பாலம் 430 நீளத்திலும், 300 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்கவே பலரும் இந்தப் பாலத்திற்கு வந்து செல்கின்றனர்.
அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து விடாதபடி வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்கைவாக் பாலத்தில் 30 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
சீனாவில் இதற்கு முன்னதாக சீனிக் பார்க்கில் இதுபோன்று கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.