இந்தியாவிலேயே முதன் முதலில் தோன்றிய மாவட்டம்.., எது தெரியுமா?
இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமை பெற்றது நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம்தான்.
இந்தியாவின் முதல் மாவட்டமாக சேலம் 1792ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டது.
அப்போது மன்னர் திப்பு சுல்தானை ஆங்கிலேயேர்கள் சூழ்ச்சியின் மூலம் வென்றார்கள்.
தற்போது உள்ள நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 7530 சதுர கி.மீ கொண்ட பகுதியாக சேலம் மாவட்டம் இருந்தது.
அலெக்சாண்டர் ரீட் என்பவர் அன்றைய சேலம் மாவட்டத்தின் ஆட்சியராக 1792 முதல் 1799ஆம் ஆண்டுவரை பதவில் இருந்தார்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் திகதி சேலம் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது 158வது ஆண்டில் அடியெடுத்துவைத்துள்ளது.
சேலமும் சுற்றியுள்ள ஊர்களும் மாம்பழ உற்பத்தியில் சிறப்பதால் இதற்கு "மாங்கனி மாநகரம்" என்ற பெயரும் உண்டு.
டெல்டா விவசாயிகளின் தாயாக விளங்கும் மேட்டூர் அணை மற்றும் ஏற்காடு மலை ஆகியவைகள் சுற்றுலாவுக்கு சிறப்பு.
சேலத்தில் பிரதான தொழிலாக விளங்குவது கைத்தறியும், ஜவ்வரிசி உற்பத்தியும், வெள்ளி கொலுசுகள் தொழிலும்.
1937ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல்முறையாக மதுவிலக்கு அமல்படுத்தியது சேலம் மாவட்டத்தில்தான் என்ற சிறப்பு பெற்றது.
மேலும் இங்குள்ள ரயில்வே ஜங்ஷனின் நடைமேடை இந்தியாவிலேயே மிக நீளமான நடைமேடையாகிறது.
சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத்தலங்கள் ஏராளமாக உள்ளது.
அதில், கோட்டை மாரியம்மன் கோவில் , 2000 வருடங்கள் பழமையான சுகவனேஸ்வரர் கோவில், குழந்தை இயேசு பேராலயம் , அயோத்தியபட்டினம் ராமர் கோவில் , முத்துமலை முருகன் கோவில், திப்பு சுல்தான் கட்டிய ஜமா மஸ்ஜித் ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |