உலகின் கடைசி சாலை எங்கு உள்ளது தெரியுமா?
உலகில் ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்றும் இருக்கும்.
அனைவரும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் செல்வதற்கு சாலை தான் நமக்கு அடித்தளமாக இருக்கிறது.
அந்த வகையில் உலகின் கடைசி சாலை எங்கே இருக்கிறது என புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஐரோப்பாவில் உள்ள "E-69 நெடுஞ்சாலை" நார்வேயில் அமைந்துள்ளது. இதுதான் உலகின் கடைசி சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பூமத்தியரேகைக்கு மேலே இந்த சாலை அமைந்துள்ளது.
வடக்கு ஐரோப்பாவில் உள்ள Nordkapp ஐ நார்வேயில் உள்ள Oldafevoord கிராமத்துடன் இணைக்கும் இந்த சாலை 129 கி.மீ. தூரத்தை கொண்டது.
முடிந்தவரை வட துருவத்திற்கு அருகில் அழைத்துச் செல்லும் சாலை இது என்பதால் இதனை பூமியின் கடைசி சாலை என்கிறார்கள்.
இந்த சாலையில், காற்று பயங்கர வேகத்தில் வீசுவதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்தனர். கோடை காலத்திலும் இங்கு பனி பொழியும்.
வானிலை முன்னறிவிப்புகள் இந்த பகுதியில் வேலை செய்யாது என்பதால் எந்த நேரத்திலும் இயற்கை சீற்றம் இந்த இடத்தில் நடைபெறும்.
1934ஆம் ஆண்டு இந்த சாலை கட்டத்தொடங்கி 1992இல் நிறைவு பெற்ற பிறகு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |