இந்தியாவில் பாம்புகளே இல்லாத ஒரே மாநிலம்.., எது தெரியுமா?
இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட வகையான பாம்புகள் காணப்படுகின்றன. இதில் 17% பாம்புகள் மட்டுமே விஷத்தன்மை கொண்டவை.
இந்தியாவிலேயே அதிக பாம்பு இனங்கள் காணப்படும் மாநிலம் கேரளா ஆகும்.
அதேபோல், இந்தியாவிலேயே பாம்புகளே இல்லாத மாநிலம் லட்சத் தீவு ஆகும்.
லட்சத்தீவு ஒரு யூனியன் பிரதேசம் மற்றும் 36 சிறிய தீவுகளால் ஆனது. லட்சத்தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 64,000 மட்டுமே.
லட்சத்தீவில் 36 தீவுகள் இருந்தாலும், அவற்றில் 10 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். நாட்டிலேயே பாம்புகள் இல்லாத ஒரே மாநிலம் இதுதான்.
லட்சத்தீவின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின்படி, லட்சத்தீவு பாம்புகள் இல்லாத மாநிலமாகும்.
இங்கு நாய்கள் கூட காணப்படுவதில்லையாம். லட்சத்தீவு நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், லட்சத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், நாய்களை உடன் அழைத்து வர அனுமதிக்கப்படுவதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |