தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் யார் தெரியுமா? வெளியான தகவல்
தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் யார் என்பது குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து உச்ச நடிகர்களின் படங்கள் அனைத்தும் பான் இந்தியாவை குறிவைத்து தயாரிக்கப்படுகின்றன.
பான் இந்தியா ரிலீஸ் காரணமாக முன்பை விட தமிழ் படங்கள் தற்போது நல்ல வசூலை பெறுகின்றன.
கமலின் விக்ரம் திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாகவும், ரஜினியின் ஜெயிலர் ரூ. 600 கோடிக்கும் அதிகமாகவும், விஜய்யின் லியோ ரூ. 600 கோடிக்கும் அதிகமாகவும் வசூலித்துள்ளன.
வசூலுக்கு ஏற்றவாறு உச்ச நடிகர்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது.
ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் ஒவ்வொரு படத்திற்கும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் பணக்கார நடிகராக கமல்ஹாசன் இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் கமல்ஹாசனிடம் ரூ. 450 கோடி அளவுக்கு சொத்து இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருவதால் மற்ற நடிகர்களை விடவும் அவர் அதிகம் சம்பாதிக்கிறார் என்று கூறப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனத்துடன் இணைத்து பார்க்கும்போது கமலிடம் ரூ. 570 கோடி அளவுக்கு சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |