இரவில் நாய் சத்தமிடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?
மனிதனின் சிறந்த நண்பனாக இருப்பது நாய் தான். பூமியில் இருக்கும் அனைத்து நாய்களும் ஓணாய் இனத்தில் இருந்து வந்தது.
நாய்களிலும் சில இனங்களை தான் நாங்கள் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கின்றோம். அதில் சில வீதிகளிலும் காடுளிலும் காணப்படுகிறது.
அனைவரது வீட்டில் இருக்கும் இந்த நாய் ஏன் குறிப்பாக இரவு நேரத்தில் கத்துகின்றது என்று உங்களுக்கு தெரியுமா?
சில சமயங்களின்படி இதை தீய சகுணம் என்று கூறுவார்கள். ஆனால் அதற்கான தர்க்க ரீதியான காரணங்கள் பற்றி யாரும் அறியாததே!!
நாய்கள் ஏன் இரவில் வித்தியாசமாக கத்துகிறது என்று பாப்போம்....
பொதுவாகவே நாய்கள் கத்தினால் அது வீட்டிற்கு தீங்கு விளைவிக்க போகின்றது என்று தான் நினைப்போம். ஆனால் அதற்கான காரணத்தை பல விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
நாய்கள் அனைத்தும் ஓணாயுடன் தொடர்புடைய ஒரு விலங்காகும். இது தன் இனத்துடன் தொடர்புக்கொள்வதற்காக அவ்வாறு அலறல் சத்தத்தை தருகின்றது என தெரிவிக்கின்றனர்.
ஆகவே இது பயம் தரக்கூடிய ஒரு சத்தம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.