தங்கத்தைப் போல வெள்ளிக்கு கடன் ஏன் வழங்கப்படுவதில்லை தெரியுமா?
பொதுவாக வங்கிகள் தங்க நகைகளை அடமானமாக வைத்து கடன் வழங்குகின்றன.
ஆனால் வெள்ளி நகைகள் அல்லது வெள்ளி பொருட்களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை. இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன.
தங்கத்தின் விலை ஒப்பிடும்போது வெள்ளி விலை அதிகமாக ஏற்ற இறக்கமாக இருக்கும்.
வெள்ளியின் சந்தை மதிப்பு வேகமாக மாறுவதால், வங்கிகளுக்கு அது பாதுகாப்பான அடமானமாக கருதப்படுவதில்லை.
தங்கத்தை விட வெள்ளியின் மதிப்பு குறைவு. அதே அளவு பணம் பெற அதிக எடையிலான வெள்ளி தேவைப்படுவதால் வங்கிகளுக்கு சிரமமாகிறது.
தங்கத்திற்கு ஹால்மார்க் போன்ற தெளிவான தரநிலைகள் உள்ளன. ஆனால் வெள்ளியின் தரநிலைகள் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை.
வெள்ளி எடை அதிகம் என்பதால் குறைந்த மதிப்புக்கு அதிக இடம் பிடிக்கும். இதை சேமிக்கவும் பாதுகாக்கவும் வங்கிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும்.

சந்தையில் தங்கக் கடன்களுக்கு அதிக தேவை உள்ளது. வெள்ளி கடன்களுக்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
இருப்பினும், சில NBFC நிறுவனங்கள் வெள்ளி மீது கடன் வழங்குகின்றன. ஆனால் அவற்றின் வட்டி விகிதம் தங்கக் கடனை விட அதிகமாக இருக்கலாம்.
மொத்தத்தில், விலை மாற்றம், மதிப்பீட்டு சிக்கல், சேமிப்பு செலவு மற்றும் குறைந்த தேவை ஆகிய காரணங்களால் வங்கிகள் வெள்ளி மீது கடன் வழங்குவதில் எச்சரிக்கையாக இருக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |