தூக்கத்தில் சிலர் நடப்பது ஏன் தெரியுமா ?
தூக்கத்தில் நடக்கும் வியாதி (ஸ்லீப் வாக்கிங்) என்பது, மக்கள் தூங்கும்போது எழுந்து நடக்கும் ஒரு வகையான கோளாறு.
மரபியல் கோளாறு, மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை போன்றவை காரணமாகப் பெரியவர்களும் தூக்கத்தில் நடப்பதுண்டு.
ஒரு நபர் தூக்கத்தின் ஆழமான கட்டத்திலிருந்து இயல்பான நிலைக்கு அல்லது விழித்திருக்கும் நிலைக்குச் செல்லும்போது நிகழ்கிறது.
தூக்கத்தில் நடப்பவருக்கு, என்ன நடக்கிறது என்னவென்று தெரியாது. எதற்கும் பதிலளிக்க முடியாது, நடந்ததை நினைவில் கொள்ளவும் முடியாது. சில சந்தர்ப்பங்களில், அவர் பேசும் வார்த்தைக்கு அர்த்தமும் இருக்காது.
தூக்கத்தில் நடப்பவர்கள் பெரும்பாலும் வீட்டைச் சுற்றி நடப்பார்கள். சில நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறவும் செய்வார்கள். ஆனால் இவை எதுவுமே வேண்டுமென்று செய்வதில்லை.
மேலும் அவரது கண்கள் விரிந்து எதையோ முறைத்து பார்ப்பது போல இருக்கும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு தாமதமாகவோ சில நேரங்களில் பதில் அளிக்காமலும் இருப்பார்கள்.
தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டதும் நடந்ததை பற்றி கேட்டுப்பாருங்கள் நிச்சயம் அவர்களுக்கு எதுவுமே நினைவில் இருக்காது.
பெரியவர்கள் தூக்கத்தில் நடந்தால் அவர்களை இயல்பு நிலைக்கு அழைத்து வந்துவிடலாம். சிறியவர்கள் அழைத்து வருவதே கடினம்.