கொரில்லா மார்பில் அடித்துக்கொள்வது ஏன் தெரியுமா?
பொதுவாக ஆண் கொரில்லாக்கள் தங்களின் பலத்தைக் காட்டவும் பெண் கொரில்லாக்களின் கவனத்தை ஈர்க்கவும் மார்பில் அடித்துக்கொள்வதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், சமீபத்திய ஆராய்ச்சிகளில், ‘நான் பலமானவன். என்னிடம் சண்டையிட்டுக் காயப்பட வேண்டாம்’ என்று சண்டையைத் தவிர்ப்பதற்காகவே பெரிய ஆண் கொரில்லாக்கள் மார்பில் அடித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள்.
மார்பில் அடிக்கும்போது ஏற்படும் அதிர்வு ஒலி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அளவில் சிறிய ஆண் கொரில்லாக்கள் மார்பில் அடித்துக்கொள்வதன் மூலம், ‘நான் சிறியவன். உன்னிடம் மோதினால் தோற்கும் வாய்ப்புள்ளது.
அதனால் சண்டைக்கு வர மாட்டேன்’ என்ற தகவலைத் தெரிவிப்பதாகவும் சொல்கிறார்கள்.
இன்னும்கூட கொரில்லாக்கள் மார்பில் அடித்துக்கொள்வது ஏன் என்பதற்கு உறுதியான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.