ஆயிரத்திற்கு 'K' என்ற எழுத்தை ஏன் பயன்படுத்துகிறோம் தெரியுமா?
பொதுவாக மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்-க்கு 'B' என்ற குறியீடும் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோல், 1000 என்ற எண்ணிற்கு ஆங்கில எழுத்தான ‘K’ என்று குறிப்பதை நாம் கவனித்திருப்போம்.
1000 என்ற எண்ணிற்கு மட்டும், ஏன் 'K' பயன்படுத்தப்படுகிறது ரன்பது குறித்து தெரியுமா?
மேற்கத்திய நாடுகள் பலவும் கிரேக்கம் மற்றும் ரோமன் கலாச்சாரத்தின் தாக்கத்தையே அதிகம் கொண்டுள்ளன.
அதேபோல தான் இந்த 'K' என்ற எழுத்து பயன்படுத்துவதற்கும் மூலம் அங்கேதான் இருக்கிறது.
கிரேக்கம் மொழியில் 'chilioi' என்றால் ஆயிரம் என்று பொருள். கிரேக்க வார்த்தையான Chilioi என்பது பிரெஞ்சுக்காரர்களால் கிலோ என்று சுருக்கப்பட்டது.
அதற்கு பிறகுதான் கிலோ மீட்டர், கிலோ கிராம் போன்றவை கணிக்கப்பட்டது. அந்த 'Kilo' என்பதற்காக தான் 'K' என்ற குறியீடு கொடுக்கப்படுகிறது.
மேலும் மில்லியன் என்ற எண்ணிற்கு 'M' என்ற எழுத்தும், பில்லியன்க்கு 'B' என்பதை போல ட்ரில்லியன் என்பதற்கு 'T' என குறிப்பிடப்படும்.
எனவே ஆயிரம் என்பதற்கு 'T' என்ற எழுத்து பயன்படுத்துவதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |