கிணறுகள் ஏன் வட்ட வடிவில் மட்டுமே உள்ளது தெரியுமா?
முன்னோர்கள் காலம் தொட்டு கிணறுகள் தோண்டப்பட்டு தண்ணீர் சேகரிக்கப்பட்டது.
மேலும், கிராமங்களிலும் நகரங்களிலும் கூட பல பழைய வீடுகளில் கிணறுகளை இன்றும் காணலாம்.
கிணறுகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை வட்ட வடிவத்தில்தான் உள்ளது.
கடந்த காலம் மட்டுமின்றி நவீன காலத்திலும் கிணறுகள் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் துளையிடும் இயந்திரங்கள் வட்ட துளையை துளைக்கின்றன.
உண்மையில், கிணறுகள் ஏன் வட்ட வடிவத்தில் மட்டும் இருக்கிறது என்று பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
பொதுவாக, வட்ட வடிவ கிணறுகள் மிகவும் வலிமையான அடித்தளத்தை கொண்டது.
அதாவது, ஒரு வட்ட வடிவ கிணற்றில் மூலைகள் இல்லாததால் கிணற்றைச் சுற்றியுள்ள நீரின் அழுத்தத்தை சமமாக வைத்திருக்கும்.
ஒரு வட்ட வடிவம் இந்த அழுத்தம் 360 டிகிரி வடிவத்தில் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்கிறது.
அதேசமயம், கிணறு வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தால், நான்கு மூலைகளிலும் தண்ணீர் அழுத்தம் இருப்பதால் கிணறு நீண்ட காலம் நீடிக்காது.
இதனால் சரிவு அபாயம் அதிகரிக்கும் என்பதால் உலகம் முழுவதும் கிணறுகள் வட்ட வடிவில் உருவாக்கப்படுகின்றன.
கிணறுகள் தலைமுறைகள் தாண்டி இருப்பதற்கு காரணமும் வட்ட வடிவில் இருப்பதால்தான். ஒரு வட்ட வடிவ கிணற்றில் சீரான அழுத்தம் இருப்பதால், மண் சரிவதற்கான வாய்ப்பை குறைகிறது.
மேலும், சதுர அல்லது முக்கோண கிணற்றை விட வட்டமான கிணற்றை வடிவமைக்க மிகவும் எளிதானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |