கேரளாவை ஏன் கடவுளின் சொந்த பூமி என்று சொல்கிறோம் தெரியுமா?
கேரளாவில் இயற்கை அழகிற்கு பஞ்சமே இல்லை. இயற்கை நிரம்பி வழியும் அந்த இடத்தை சொர்க்கம் என்று கூறலாம்.
சிலர் அதனால், இது கடவுளின் சொந்த பூமி என்று கூறுவார்கள். ஆனால், இதற்கும் ஒரு கதை உள்ளது.
மகாபாரதத்தில் பீஷ்மர், கர்ணன் போன்றவர்களின் குருவும், விஷுனுவின் அவதாரமும் ஆன பரசுராமர் பற்றி தெரியும்.
அதேபோல் இவர் வாழ்வின் குறிக்கோள் பற்றி அறியாதவர்கள் இல்லை. சத்ரியர்கள் மீதிருந்த அதீத கோபம் காரணமாக அவர்களை கொல்வதையே குறிக்கோளாக வைத்திருந்தவர் பரசுராமர்.
கோபம் கொண்டால் பூமி தாங்காது என்ற வசனம் அவருக்கே செல்லும். அந்தவகையில் அவர் தனது வாழ்வில் ஏராளமான சத்ரியர்களை கொன்றார்.
கிட்டத்தட்ட 21 சத்ரிய சந்ததிகளைக் கொன்று, ஐந்து ஆறுகளில் அவர்களின் ரத்தத்தை கரைத்திருக்கிறார்.
உயிர்களைக் கொன்ற பாவத்திலிருந்து விடுபட பரசுராமர், பல துறவிகளையும், முனிவர்களையும் சந்தித்தார்.
அப்போதுதான் ஒரு முனிவர், ஒரு தனி இடத்தை பிராமணர்களுக்காக நிறுவினால் மட்டுமே உன்னுடைய பாவம் நீங்கும் என்று சொல்லியிருக்கிறார்.
பரசுராமர் நேராக கர்நாடகாவில் உள்ள கோகர்னாவிற்கு சென்று தவம் செய்து வருண தேவரையும், பூமி தேவியும் அழைத்து பல நாட்கள் தவம் புரிந்தார்.
அவர்கள் இருவரும் தோன்றி ஒரு கோடாரியை வழங்கினர். பரசுராமர் அந்தக் கோடாரியை அரபி கடலில் தூக்கி எறிந்திருக்கிறார்.
அப்போது கடல் விலகி நிலப்பரப்பாக மாறியிருக்கிறது. அதாவது கோகர்னாவிற்கும் கன்னியாகுமரிக்கும் இடையே ஒரு நிலம் உருவாகியிருக்கிறது.
பின்னர், வட பாரதத்திலிருந்து பிராமணர்களை வரவழைத்து அங்கு குடிப்பெயரவைத்தார். அந்த இடம்தான் கேரளா.
ஒரு கடவுளே அந்த இடத்தை உருவாக்கியதால்தான் அது கடவுளின் இடமாக இருந்து வருகிறது.