Google pay மூலம் ரூ.9 லட்சம் வரை Personal loan வாங்கலாம்: எப்படி தெரியுமா?
Google Pay மூலம் தனிநபர் கடனை ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 9 லட்சம் வரை எளிதாகப் பெறலாம்.
Google Pay வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்க பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
அதாவது Google Pay நேரடியாக கடன்களை வழங்காது. எனவே வாடிக்கையாளர்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
எப்படி கடன் பெறுவது?
முதலில் நீங்கள் Google Pay App-க்குச் செல்ல வேண்டும். அதிக Get Loan என்ற Option இருக்கும்.
இப்போது Apply Now விருப்பத்தை Click செய்யவும். ஒரு புதிய பக்கம் திறக்கும். இப்போது நீங்கள் கடன் விவரங்களைக் காண்பீர்கள்.
ரூ. 9 லட்சம் வரை கடன் பெறலாம். குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து கடன் பெறலாம்.
மாதாந்திர EMI ரூ. 1,000 முதல் தொடங்குகிறது. கடன் தொகையின் அடிப்படையில் EMI-யும் மாறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடன் காலம் 6 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை பெறலாம். கடன் வட்டி விகிதத்தைப் பொறுத்தவரை, இது 13.99 முதல் தொடங்குகிறது.
இப்போது நீங்கள் App-ல் உள்ள Button-ஐ Click செய்ய வேண்டும். உங்கள் Mobile number மற்றும் e-mail address விவரங்கள் தோன்றும்.
Continue விருப்பத்தை Click செய்யவும். இப்போது உங்கள் current address pincode-ஐ உள்ளிடவும். பின்னர் Next விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
இப்போது Pan card விவரங்களை வழங்கவும். பின்னர் ஆதார் எண் மற்றும் வேலை தொடர்பான விவரங்களை உள்ளிடவும்.
அப்போது உங்கள் கடன் தகுதி உங்களுக்குத் தெரியும். நீங்கள் தகுதியுடையவராக இருந்தால், உடனடியாக கடனைப் பெறலாம்.
இல்லையெனில் உங்களுக்கு கடன் தரப்படமாட்டாது. அதன் பிறகு நீங்கள் தவணைக்காலம் மற்றும் EMI விவரங்களை சரிபார்த்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
மற்ற கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூட்டாண்மை மூலம் கடன் வசதி சேவையை Google Pay வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |