பொடுகு தொல்லை பாடாய்படுத்தி எடுக்குதா? இதனை எப்படி எளிய முறையில் போக்கலாம் தெரியுமா?
Dandruff
Hair Tips
By Kishanthini
பொதுவாக ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை பொடுகு தொல்லை தான்.
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.
இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லை என்றால் முடி அதிகமாக உதிர ஆரம்பித்துவிடும். அந்தவகையில் பொடுகை விரட்ட உதவும் சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
- 3 அல்லது 4 தேக்கரண்டி தேனைப் பயன்படுத்தி ஒரு ஹேர் மாஸ்க் தயார் செய்து அதனுடன் அரை எலுமிச்சை சாற்றை பிழிந்து உங்கள் உச்சந்தலையில் சமமாக தடவவும், அல்லது பொடுகு பாதிப்புக்குள்ளான பகுதியில் மட்டும் தடவவும். 15 நிமிட மென்மையாக மசாஜ் செய்த பிறகு தலைமுடியைக் தண்ணீரில் அலசுங்கள்.
- வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம பாகங்களில் சேர்த்து உச்சந்தலையில் தடவிய பின் மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு ஒரு மைல்டு ஷாம்பூவுடன் உங்க தலை முடியை நன்கு அலசவும். வேம்பு மற்றும் தேங்காய் எண்ணெய்யின் நற்குணங்கள் உங்கள் தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.
- . தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து அதனை உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவில் தலையை அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் பொடுகு தொல்லை விரைவில் நீங்கும். தலை பொடுகு தவிர்க்க வேண்டுமானால் சூடான தண்ணீரில் தலைகுளிப்பதை தவிர்க்க வேண்டும்.
- தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை கண்டிப்பாக நீங்கும். அடுத்ததாக வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் தலையை அலசுங்கள்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US