கேரளா பெண்களின் கூந்தல் ரகசியத்திற்கு இந்த இரண்டு பொருட்கள் தான் காரணமாம்! அவசியம் நீங்களும் தெரிஞ்சிகோங்க
பொதுவாக நீண்ட அடர்தியான கூந்தல் என்றாலே நாம் நினைவுக்கு முதல் வருவது கேரளா பெண்கள் தான். கேரளாவில் இருக்கும் பெண்களின் கூந்தல் நீண்டு கருகருவென அடர்த்தியாக வளர்ந்திருக்கும்.
அதை பார்ப்பதற்கே நமக்கு ஆச்சரியமாகவும், ஏக்கமாகவும் கூட இருக்கும். உண்மையில் இவர்கள் தங்களது கூந்தலுக்கு அதிகம் பணம் செலவழிப்பதில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு தான் அழகாக வைத்து கொண்டனர்.
தற்போது கேரளா பெண்களின் கூந்தலுக்கு என்ன பொருட்கள் காரணம் என்று தெரிந்து கொள்வோம்.
கருஞ்சீரகம்
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் புரோட்டீன், விட்டமின் ஏ, பி, சி, இ, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து வேர்களை தூண்டி விட செய்யும்.
கருஞ்சீரகத்தை கொண்டு செய்யப்படும் எண்ணெய்கள் மேற்கத்திய நாடுகளில் முடி வளர்ச்சிக்கு பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வெந்தயம்
வெந்தயத்தில் இருக்கும் புரோட்டீன், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், நிகோடினிக் அமிலம் ஆகிய மூலப் பொருட்கள் முடி உதிர்வை தடுத்து வேகமாக அடர்த்தியாக வளர செய்யும்.
இந்த ரெண்டு பொருட்களுடன் இந்த இரண்டு எண்ணைகளை சேர்த்து பயன்படுத்தினால் நிச்சயம் 100% நல்ல பலன்களைக் கொடுக்கும்.
செய்முறை
மூன்று பங்கு தேங்காய் எண்ணெயுடன், ஒரு பங்கு விளக்கெண்ணெய் சேர்த்து அடுப்பில் லேசாக சூடேற்ற வேண்டும்.
அதில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் தலா 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொதிக்க விடுங்கள். லேசாக நுரை போல பொங்கி வரும், அந்த நுரை பொங்கி அணையும் வரை கிண்டி விட்டு கொண்டே இருங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
நன்கு ஆற விட வேண்டும், ஒரு ஐந்து மணி நேரம் அதில் இந்த இரண்டு பொருள்களும் அப்படியே ஊற விடுங்கள். எண்ணெய் ஆறி சீரகம் மற்றும் வெந்தயம் நன்கு ஊறி இருக்கும். அதன் பிறகு எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
எப்படி பயன்படுத்த வேண்டும்?
இந்த எண்ணெயை கொண்டு வாரம் மூன்று முறை வேர் கால்களுக்கு மசாஜ் செய்து விட வேண்டும். இந்த எண்ணெய் இரவு நேரங்களில் தலைக்கு மசாஜ் செய்து விட்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளித்து விடலாம். அல்லது வாரம் மூன்று முறை லேசாக முடியின் வேர்க்கால்களுக்கு மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடவும் செய்யலாம்.
அது உங்கள் விருப்பம் தான். இப்படி தொடர்ந்து மூன்று மாதம் செய்ய உங்கள் இழந்த முடி மீண்டும் வளர்ச்சி அடையும். கொட்டிய இடத்தில் இருந்து மீண்டும் புதிய முடி முளைக்க துவங்கும்.