நீங்கள் பணக்காரராக வேண்டுமா? ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் போதும்
பணக்காரர்கள் ஆவது குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கட்டுரை எழுதும் டேவிட் பேட்ச் என்பவர் சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்
அமெரிக்காவின் அதிகம் விற்பனையாகும் நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கட்டுரை எழுதுபவர் டேவிட் பேட்ச். இவர், எப்படி பணக்காரராக வளர்வது, அதிலும் சுயமாக பொருளாதார பாதுகாப்புள்ள தனி மனிதனராக நம்மை உருவாக்கிக் கொள்வது என்பது பற்றிய டிப்ஸ்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் கூறும் போது, "நாம் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் முதலில் நம்முடைய தேவைக்கான பணத்தை சேமித்து வைக்க வேண்டும். அதாவது, நாம் சேமிக்கின்ற பணத்தில் 14% பணத்தை சேமிக்க வேண்டும். நம்முடைய ஒரு மணி நேர உழைப்பை நமக்காக ஒதுக்க வேண்டும்.
நாம் பொதுவாக 35 ஆண்டுகள் உழைக்கிறோம். குறிப்பாக நாம் உழைக்கும் 90 ஆயிரம் மணி நேரங்களில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் நமக்கானது" என்று கூறுகிறார்.
சில டிப்ஸ்கள்
மேலும் டேவிட் பேட்ச் கூறுகையில், "நமக்கான பணத்தை ஒதுக்குவது, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்தை நமக்காக செலவிடுவது போன்றவற்றை நாம் உறுதி செய்ய வேண்டும். இதை செய்தால் நம்முடைய உழைப்பின் பலனை அனுபவிக்கும் முதல் ஆள் நாம் தான்.
நீங்கள் சம்பாதிக்கும் உங்களுடைய பணத்தில் கடன்கள், மருந்து, உணவு, வாடகை, வரி என எல்லாவற்றிற்கும் செலவழித்துவிட்டு பார்த்தால் எதுவும் சேமிக்க முடியாது. அப்படி இருந்தால் எவ்வாறு நீங்கள் பணக்காரராக முடியும்.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தால், 9 மணி நேரத்தை மற்றவற்றிற்கு ஒதுக்கிவிட்டு மீதம் இருக்கும் ஒரு மணி நேரத்தை உங்களுக்கானது என்று ஒதுக்குங்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |