எடையை சீக்கிரம் குறைக்கணுமா? அப்போ இரவு நேரத்தில் இந்த டீ மட்டும் குடிச்சு பாருங்க
இன்றைய காலத்தில் நம்மில் பலர் உடல் எடையை அதிகரிப்பால் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றது. எடை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
அதில் இரவு நேரத்தில் கலோரிகள் அதிகமாக உள்ள உணவு வகைகளை நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் கூட ஒரு காரணமாக அமைகின்றது.
அதுமட்மின்றி இரவில் அதிக உணவு உட்கொள்ளும் பொழுது கூடுதல் கலோரிகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இருதய நோய், நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட அது வழிவகுக்கும்.
எனவே இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது சிறந்தாகும். அதற்கு கொழுப்புகளை குறைக்க உதவி புரியும் சில பானங்களை நீங்கள் உட்கொள்ளும் போது, அது உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.
இதுபோன்ற பானங்களை நீங்கள் தூங்குவதற்கு முன் அருந்தும் பொழுது அது உங்களுக்கு ஒரு நல்ல தூக்கத்தை கொடுக்கும். இதன் காரணமாகவும் நீங்கள் எடை இழக்கலாம். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
- பாலில் கால்சியம் மற்றும் ட்ரிப்டோபன் சத்து நிறைந்து காணப்படுவதால் இரவில் தூங்குவதற்கு முன் பால் குடிப்பது நல்லது. இது நல்ல தூக்கம் கிடைக்க நமக்கு உதவுகிறது. இரவு நேரத்தில் நீங்கள் பாதாம் பாலை அருந்தலாம். இனிப்பில்லாத சோயாப்பால் மற்றும் யோகர்ட் சேர்த்து நன்றாக கலந்து குடிக்கலாம் .
- சீமைச்சாமந்தி தேநீர், குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் எடை இழப்புக்கு அதிகமாக உதவுகிறது. எனவே உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்க, இந்த சீமைச்சாமந்தி தேனீரை இரவு தூங்குவதற்கு முன் பருகுவது பெரிதும் உதவுகிறது.
- இலவங்கப்பட்டையில் பல்வேறு ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆன்டிபயாடிக் பண்புகளும் அடங்கியுள்ளது. இதனால் இது உடலிலுள்ள அதிக கொழுப்பை குறைப்பதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இரவில் சீரான தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது. சிலருக்கு இந்த லவங்கப்பட்டை தேநீரின் சுவை பிடிக்காது. இதன் சுவையை அதிகரிக்க இதனுடன் சிறிது தேன் கலந்து குடித்தால் போதும்.
- இரவில் தூங்கப் போவதற்கு முன்பு நீங்கள் வெந்தய தேநீரை அருந்தலாம். இது உடலில் சென்று வெப்பத்தை அதிகரித்து எடையை குறைக்க உதவுகிறது. செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தேநீர் ஒரு நல்ல வழிகாட்டி. இந்த வெந்தய தேநீர் செரிமான பிரச்சினைகளால் ஏற்படும் சிக்கல்களை கட்டுப்படுத்த உதவுகிறது.
- எடை இழப்பு மற்றும் செரிமான பிரச்சனைகளை மேம்படுத்த இந்த மஞ்சள் நமக்கு உதவுகிறது. இந்த மஞ்சளில் உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. எனவே பாலுடன் இந்த மஞ்சளை கலந்து கொதிக்க வைத்து குடிக்கும் பொழுது, உங்களுக்கு நல்ல தூக்கமும் எடை எடை இழப்பும் கிடைக்கிறது.
