பட்டு போல் கூந்தல் பளபளக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்
Hair tips
Hair problem
By Kishanthini
நாம் உண்ணும் தவறான உணவு பழக்கங்களாலும், மாசு நிறைந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், கூந்தல் உதிர்ந்து, வரண்டு போய்விடுகிறது. அதுமட்டுமின்றி கூந்தலுக்கு கலரிங்,ஸ்ரேட்டிங் செய்வது இன்று ஃபேஷனாகி போய்விட்டது.
இவற்றினால் கூந்தல் பலவீனப்படுவதோடு மட்டுமல்லாமல் பொடுகு தொல்லையும் வலுக்கிறது. எனவே கூந்தலை பராப்பது மிகவும் அவசியமாகும்.
கூந்தலை எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி பட்டுப்போல் வைத்திருக்க ஒரு சில எளிய வழிகள் உள்ள தற்போது அவற்றை பார்ப்போம்.
- வெந்தயத்தை நன்றாக ஊறவைத்து, பசைபோல அரைத்து கூந்தலில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடல் குளுமை அடைவதோடு, கூந்தலும் பளபளப்பாகும்.
- மாதம் ஒரு முறை வேப்பிலை மற்றும் துளசி இலை சேர்த்து அரைத்து தலையில் தடவலாம். அரை மணிநேரம் கழித்து தலைக்கு குளிப்பதன் மூலம் பொடுகுத் தொல்லை மற்றும் பேன் தொல்லையில் இருந்து விடுபடுவதோடு கூந்தலும் பளபளப்பாகும்.
- கற்றாழையின் சதைப்பகுதியுடன் சிறிதளவு தயிர் கலந்து, கூந்தலின் வேர்க்கால்களில் நன்றாக படும் படி அழுத்தித் தேய்க்கவும். அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும். இதன் மூலம் பொடுகுத் தொல்லை நீங்குவதோடு முடியின் நுனியில் ஏற்படும் வெடிப்பு பிரச்சினையும் நீங்கி கூந்தல் பளபளப்பாகும்.
- கூந்தல் வறண்டு இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் கலந்து, வாரத்தில் இரண்டு முறை கூந்தலில் தேய்த்து குளித்துவரலாம். இதன் மூலம் வறண்ட கூந்தல் பட்டுப்போல பளபளக்கும்.
- தலா 50 மில்லி அளவு கறிவேப்பிலை சாறு மற்றும் மருதாணி சாறு இரண்டையும் ஒன்றாகக் கலந்து, 150 மில்லி தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். இந்த எண்ணெய்யை இளம் சூட்டில் தலைமுடியில் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும். முடி உதிர்தல் குறையும். கூந்தல் பளபளப்பாகும்.
- அரை மூடி தேங்காயில் இருந்து தேங்காய் பால் எடுக்கவும். அதன் முதல் பாலை கூந்தலில் நன்றாக தேய்க்கவும். ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கூந்தலை கழுவுவதன் மூலம், பளபளப்பான கூந்தலைப் பெறலாம்.
- நெல்லிக்காய் எண்ணெய்யை தினமும் தலையில் தேய்ப்பதன் மூலம், முடி உதிர்வது குறைந்து கூந்தல் வலுவாகும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US