மாட்டு சாணம் சாப்பிடுங்க.. கோமியம் குடிங்க.. பிரபல மருத்துவர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!
இந்தியாவில் மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் மாட்டு சாணம் சாப்பிட்டால் கொரோனா தொற்றில் இருந்து குணமடையலாம் என்று பல வதந்திகள் கிளம்பியது. இந்நிலையில் மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஹரியானாவை சேர்ந்த மனோஜ் மிட்டல் என்பவர் பிரபல மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் பசுக்களை கட்டி வைத்திருக்கும் தொழுவத்திற்கு சென்று பசுவின் சாணத்தை எடுத்து சாப்பிட்டபடி கேமிராவை பார்த்து பேசியுள்ளார்.
அது மட்டும் இல்லாமல் பசுவின் சிறுநீரகத்தை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இந்த வீடியோவில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, மாட்டின் கழிவுகளை சாப்பிடுவதால் நமது உடலும் மனமும் தூய்மையாகும்.
Oh my God. I am short of words. https://t.co/fDFFcoPcp5
— A Skin Doctor (@askindoctor) November 16, 2021
அது நம் உடலுக்குள் நுழைந்தவுடன் அது நம் உடலை சுத்தப்படுத்துகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தத்தை சரி செய்கிறது. என்று தெரிவித்துள்ளார். தற்போது அந்த மருத்துவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.