சிறையிலிருந்த நபருக்கு பொய்யாக மருத்துவச் சான்றிதழ் வழங்கிய மருத்துவருக்கு சிறை
மருத்துவர் ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒரு கைதிக்கு, அவர் உடல் நலமில்லாமல் இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் கொடுத்ததால், அவர் சிறை செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறையிலிருந்த நபருக்கு மருத்துவச் சான்றிதழ்
தன் மனைவியைப் பிரிந்த ஒரு நபர், தன் மகளை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டுள்ள நேரத்தில் மகளைக் காணச் செல்லவில்லை.
தான் உடல் நலமில்லாமல் இருப்பதால் மகளைக் காணவர இயலவில்லை என அவர் தன் முன்னாள் மனைவியிடம் கூறியுள்ளார்.
அதற்கு ஆதாரமாக அவர் மருத்துவச் சான்றிதழ் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
உண்மை என்னவென்றால், அவர் சிறையிலிருக்கிறார். மகளைக் காணச் செல்லாமல், ஜெனீவாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடமிருந்து பொய்யாக தனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவச் சான்றிதழ் ஒன்றைப் பெற்று தன் முன்னாள் மனைவியிடம் கொடுத்துள்ளார்.
உண்மை தெரியவந்ததால், சான்றிதழ் கொடுத்த மருத்துவருக்கு தற்போது கடும் சிக்கல் உருவாகியுள்ளது. ஆம், அவருக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த மருத்துவர், தன்னிடம் மருத்துவச் சான்றிதழ் பெற்ற நபர் சிறையிலிருப்பது தனக்குத் தெரியாது என்றும், தன்னை அவர் ஏமாற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், மருத்துவர் பொய் சொல்கிறார், சிறையிலிருக்கும் ஒருவர் மருத்துவச் சான்றிதழ் வாங்க முயன்றால், அது குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவருக்குத் தெரிவிக்கப்படும் என்றும், அது வழக்கமான நடைமுறைதான் என்றும் நீதிமன்ற அதிகாரிகள் பொலிசாரிடம் கூறிவிட்டார்கள்.
தற்போது, தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார் அந்த மருத்துவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |