இறப்புச் சான்றிதழுக்காக காத்திருந்த உயிரிழந்தவரின் உறவினர்கள்: மருத்துவரின் மோசமான செயல்
Doctor caught drinking inside post-mortem room while family wait for death certificate: உயிரிழந்த ஒருவரின் உறவினர்கள் இறப்புச் சான்றிதழுக்காக காத்திருக்க, மருத்துவரோ, பிணவறைக்குள் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், உயிரிழந்த ஒருவரின் உறவினர்கள் இறப்புச் சான்றிதழுக்காக காத்திருக்க, அதைக் கொடுக்கவேண்டிய மருத்துவரோ, பிணவறைக்குள் மது அருந்திவிட்டு போதையில் படுத்திருந்துள்ளார்.
மருத்துவரின் மோசமான செயல்
மஹாராஷ்ட்ராவிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்த ஒருவரின் உறவினர்கள் இறப்புச் சான்றிதழுக்காக காத்திருக்கிறார்கள்.

பிணவறைக்குள் சென்ற மருத்துவர் வெளியே வராததால், ஒருவர் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்துள்ளார்.
அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் போதையில் படுத்திருப்பது தெரியவந்துள்ளது.
அந்த அறையிலுள்ள மேசை ஒன்றில் மதுபான போத்தல்களும் உணவுப்பொருட்களும் வைக்கப்பட்டிருக்க, மருத்துவர் போதையில் சோஃபா ஒன்றில் படுத்துக் கிடப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது.
அந்த மருத்துவரின் பெயர், Dr வைபவ் (Dr Vaibhav Avinash Mhaske).
அதைத் தொடர்ந்து, உடனடியாக அந்த மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.