42 வயதில் பிரபல நடிகை அதிர்ச்சி மரணம்! அவருக்கு முன்பே தெரியும்..பகீர் கிளப்பிய மருத்துவர்
பிரபல மலையாள நடிகை சுபி சுரேஷின் அதிர்ச்சி மரணம் குறித்து மருத்துவர் சன்னி ஒரதெல் விளக்கம் அளித்துள்ளார்.
நகைச்சுவை நடிகை
மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் வலம் வந்தவர் சுபி சுரேஷ்.
42 வயதான இவர் கல்லீரல் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்றைய தினம் திடீரென உயிரிழந்தார்.
அவரது மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சுபி சுரேஷிற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருந்தது, ஆனால் அது தாமதமானதால் தான் அவர் உயிரிழந்தார் என குற்றம்சாட்டப்பட்டது.
மருத்துவர் விளக்கம்
இந்த நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சன்னி ஒரதெல், சிகிச்சை தாமதத்தால் சுபி சுரேஷ் உயிரிழக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தாமதத்தால் அவர் அகால மரணம் அடையவில்லை. உண்மையில் அறுவை சிகிச்சைக்கான நடைமுறைகள் வழக்கத்தை விட மிக வேகமாக இருந்தன.
கல்லீரல் தானம் செய்பவரைக் கூட கண்டுபிடித்தோம். நாங்கள் தயாராக இருந்தபோதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அறுவை சிகிச்சையை நிறுத்த வேண்டியதாயிற்று. தனது உடல்நிலை குறித்து சுபி சுரேஷிற்கு முன்பே தெரியும்' என தெரிவித்துள்ளார்.