ஆன்டிபயாடிக் சிகிச்சை எடுத்துக்கொண்ட மருத்துவர் தற்கொலை: திகிலை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
இதயவியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கான காரணம் திகிலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உயிர் காக்கும் மருந்துகளின் பக்க விளைவுகள்
உலகில் முதன்முதலாக பெனிசிலின் என்னும் ஆன்டிபயாடிக் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது ஏராளமானோரின் உயிரைக் காப்பாற்றியது.
காலப்போக்கில் புதிது புதிதாக பல ஆன்டிபயாடிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த ஆன்டிபயாடிக்குகளைப் பொருத்தவரை, அவை உடலுக்குள் சென்று, உடலில் நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளை, குறிப்பாக பாக்டீரியா என்னும் நோய்க்கிருமிகளைக் கொல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
அப்படி அவை நோய்க்கிருமிகளைக் கொல்லும் அதே நேரத்தில், அவற்றை உட்கொள்ளும் நபரின் உடலுக்கும் சில தீங்குகளை ஏற்படுத்துகின்றன. அவை பக்க விளைவுகள் என அழைக்கப்படுகின்றன.
MSN
வெவ்வேறு ஆன்டிபயாடிக்குகள், தலைவலி முதல் சிறுநீரக பாதிப்பு வரையில், வெவ்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மருத்துவரின் உயிரையே பறித்த பக்க விளைவு
சில குறிப்பிட்ட மருந்துகள், அபூர்வமாக தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்தக்கூடும். பிரித்தானியாவில் ஒரே ஆண்டில் முகப்பருவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்ட 10 பேர் தற்கொலை செய்துகொண்டதைக் குறித்த செய்தி நினைவிருக்கலாம்.
தற்போது, புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தற்கொலைக்கு, அவர் எடுத்துக்கொண்ட ஆன்டிபயாடிக் மருந்தின் பக்க விளைவு காரணம் என தெரியவந்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மாயமான மருத்துவர்
பிரித்தானியாவின் West Yorkshireஇலுள்ள பிரபல மருத்துவமனையில் இதயவியல் நிபுணராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் Dr Robert Stevenson.
புரோஸ்ட்ரேட் சோதனைக்காக தயாராவதற்காக அவருக்கு சிப்ரோப்ளாக்சசின் (ciprofloxacin) என்னும் ஆன்டிபயாடிக் கொடுக்கப்பட்டது.
ஆன்டிபயாடிக் சிகிச்சை துவங்கி ஒரு வாரத்துக்குப் பின் ஒரு நாள் வாக்கிங் சென்ற அவர் காணாமல் போனார். பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் அவரை ஓரிடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடித்தார்கள்.
TEK IMAGE
நீதிமன்ற அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அவர் எடுத்துக்கொண்ட ஆன்டிபயாடிக் சிகிச்சையின் பக்க விளைவுகள் அவரை தற்கொலை செய்யத் தூண்டியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், Dr Robertக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரைத்த மருத்துவருக்கே இப்படி ஒரு அபூர்வ பக்க விளைவு அந்த மாத்திரைக்கு இருப்பது தெரியவில்லை.
இன்னொரு விடயம், பல மருத்துவர்களுக்கு இந்த விடயம் தெரியாதாம். ஆக, உலகில் ஏராளமானோர் இந்த ஆன்டிபயாடிக்குகளை எடுத்துக்கொள்ளும் நிலையில், அதற்கு இப்படி ஒரு பயங்கர பக்க விளைவு இருப்பது பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
என்ன சின்ன பிரச்சினையானாலும், உடனே மருந்து கடைக்கு ஓடிச் சென்று ஆன்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கி விழுங்குவோருக்கும் இது ஒரு எச்சரிக்கை செய்தி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |