நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த மருத்துவர்... கொரோனா தடுப்பூசியால் நேர்ந்த ஈடு செய்யமுடியாத இழப்பு
நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த மருத்துவர் ஒருவர், கொரோனா தடுப்பூசி ஒன்றின் பக்க விளைவுகளால் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
தடுப்பூசி தயாரிப்பு
கொரோனா தொற்று பரவத் துவங்கியதுமே பல்வேறு நாடுகளிலுள்ள பல மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனாவுக்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கின.
அதன் விளைவாக கீழ்க்கண்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன.
The Pfizer/BioNTech Comirnaty vaccine, 31 December 2020.
The SII/COVISHIELD and AstraZeneca/AZD1222 vaccines, 16 February 2021.
The Janssen/Ad26.COV 2.S vaccine developed by Johnson & Johnson, 12 March 2021.
The Moderna COVID-19 vaccine (mRNA 1273), 30 April 2021.
The Sinopharm COVID-19 vaccine, 7 May 2021.
The Sinovac-CoronaVac vaccine, 1 June 2021.
The Bharat Biotech BBV152 COVAXIN vaccine, 3 November 2021.
The Covovax (NVX-CoV2373) vaccine, 17 December 2021.
The Nuvaxovid (NVX-CoV2373) vaccine, 20 December 2021
பக்க விளைவுகள் பலவற்றை உருவாக்கிய கொரோனா தடுப்பூசி
இப்படி பல நாடுகள், பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நிலையில், சில நிறுவனங்களின் தயாரிப்பான தடுப்பூசிகள், குறிப்பாகச் சொன்னால், ஆஸ்ட்ராசெனகா நிறுவனத் தடுப்பூசி, பல பக்க விளைவுகளை உருவாக்குவது தெரியவந்தது.
குறிப்பாக, இளம்பெண்களுக்கு மூளையில் இரத்தக்கசிவு, இதயப் பிரச்சினையால் உயிரிழக்கும் அபாயம் என்னும் பல பயங்கர பக்க விளைவுகளை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி உருவாக்குவது தெரியவந்தது.
உயிரிழந்த இளம் மருத்துவர்
இப்படி ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி மோசமான பக்க விளைவுகளை உருவாக்குவது தெரியவந்தும், அது குறைந்த அளவில்தான் இத்தகைய மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என ஒரு தரப்பு வக்கலாத்து வாங்க, பின்னர் அது குறித்த செய்திகள் வருவதே குறைந்துபோனது.
இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள கென்டைச் சேர்ந்த Dr Stephen Wright (32), ஆஸ்ட்ராசெனகாவின் பக்க விளைவுகளால் உயிரிழந்தார். நல்ல ஆரோக்கியமாக இருந்த அவர், 2021ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் ஆஸ்ட்ராசெனகா நிறுவன கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட 10 நாட்களில் உயிரிழந்தார்.
அவரது மரணம் தொடர்பாக துவக்கப்பட்ட நீதிமன்ற அதிகாரிகளின் விசாரணை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த முடிவுகள், நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்த Dr Wright, ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, மூளையில் brainstem infarction என்னும் பிரச்சினையும், மூளையில் இரத்தக்கசிவும் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார் என கூறுகின்றன.
நல்ல நிலையில் இருந்த தன் கணவர் தடுப்பூசியின் பக்க விளைவால் உயிரிழந்துள்ளார் என்பதை நீதிமன்ற அதிகாரியின் விசாரணை முடிவுகள் உறுதி செய்துள்ளதைத் தொடர்ந்து, இளம் வயதில் தன் கணவரை இழந்து தவிக்கும் Dr Wrightஇன் மனைவியான Charlotte, ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் மீது வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார்.