மார்பக புற்றுநோய் என கூறி சக மருத்துவரிடம் பெருந்தொகையை ஏமாற்றிய பெண்: கனடாவில் சம்பவம்
கனடாவில் அழகான பெண் மருத்துவர் ஒருவர் சக மருத்துவரிடம் பெருந்தொகையை ஏமாற்றியதுடன், போலியான ஆவணங்களால் தற்போது மருத்துவராக பணியாற்றவும் தடை செய்யப்பட்டுள்ளார்.
ஏமாற்றிவிட்டு மாயமாகியுள்ளதாக
குறித்த மருத்துவர் மொத்தமாக 160,000 டொலர் தொகையை ஏமாற்றிவிட்டு மாயமாகியுள்ளதாகவே கூறப்படுகிறது. Monica Kehar என்பவர் தமக்கு மார்ப புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக குறிப்பிட்டு தமது சக மருத்துவர் Meaghan Labine என்பவரிடம் இருந்தே பெருந்தொகை ஏமாற்றியுள்ளார்.
கடந்த 2018ல் இருவரும் முதல்முறையாக சந்தித்துள்ளனர். இருவரும் குடும்ப நல மருத்துவராக பயிற்சி மேற்கொண்டுள்ளனர். தமக்கு மார்பக புற்றுநோய் என்று குறிப்பிட்டு பலமுறை பணம் கைப்பற்றியுள்ளார்.
மட்டுமின்றி, வாங்கிய தொகையை கண்டிப்பாக திருப்பித் தருவதாக ஒப்பந்தமும் முன்னெடுத்துள்ளார். ஆனால் அவரின் பணத் தேவை மட்டும் குறையவே இல்லை என்றும் மருத்துவர் Meaghan Labine தெரிவித்துள்ளார்.
ஒருகட்டத்தில் மோனிகா கெஹருக்கு புற்றுநோய் இல்லை என்றும், அவர் இதுவரை கூறியது அனைத்தும் பொய் என்றும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, மருத்துவப் படிப்பில் இருந்தே அவர் வெளியேற்றப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆவணங்களில் முறைகேடு
2020 நவம்பர் மாதம் கெஹர் தொடர்பில் மருத்துவத்துறை சார்பில் விசாரணையும் முன்னெடுக்கப்பட்டது. 2019 பிப்ரவரி மாதம் குடும்ப நல மருத்துவராக பயிற்சி பெற அவர் முதலாம் ஆண்டு மாணவராக பதிவு செய்துள்ளார். ஆனால் உரிய உரிமம் பெறும் முன்னரே, மருத்துவர் என குறிப்பிட்டு சிகிச்சை முன்னெடுத்துள்ளார்.
இந்த விவகாரம் உரிய அதிகாரிகளுக்கு தெரிய வரவே, கெஹர் சிகிச்சை அளிப்பதை நிறுத்தியுள்ளார். மட்டுமின்றி ஆவணங்களில் அவர் முறைகேடு செய்துள்ளதும் அம்பலமானது.
அது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உளவியல் ரீதியான நெருக்கடியால் ஏற்பட்ட குழப்பம் என விளக்கமளித்துள்ளார். அவர் மீதான விசாரணையின் முடிவில் அவரை மருத்துவப் பணியில் இருந்து வெளியேற்றினர்.
மேல்முறையீடு செய்திருந்தும், அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கனடாவில் அவர் மருத்துவராக பணியாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |