சளியை குணமாக்க 5 வயது சிறுவனை சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்
சளிக்கு சிகிச்சை பெற வந்த 5 வயது சிறுவனை மருத்துவர் ஒருவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி வீடியோ
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், ஜலான் நகரில் சளி பிடித்ததால் 5 வயது சிறுவன் மாவட்ட சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு மருத்துவர் சுரேஷ் சந்திரா பணியில் இருந்துள்ளார்.
அப்போது, சளிக்கு சிகிச்சை பெற வந்த 5 வயது சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சிகிச்சை பெற வந்த சிறுவனிடம் மருத்துவர் சிகரெட்டை கொடுக்கிறார். பின்னர் அவர் அதனை பற்ற வைத்ததும் பலமுறை அவன் புகைக்கிறான்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து சம்மந்தப்பட்ட மருத்துவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரிடம் துறை மீதான விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |