உயிர் பிரியும் நேரத்தில் குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள்? மருத்துவர் தரும் விளக்கம்
மரணம் அனைவருக்கும் பொதுவானதுதான் என்றாலும், மரணத்தருவாயில், பெரியவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதற்கும், சிறுவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்பதை ஆய்வுகள் மூலம் கற்றறிந்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.
மருத்துவர் தரும் விளக்கம்
உயிர் பிரியும் தருவாயிலிருக்கும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் பொறுப்பிலிருக்கும் மருத்துவரான Dr கிறிஸ்டோபர் (Dr Christopher Kerr) என்பவர், தனது 1,500 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வில் தான் கண்ட விடயங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
Picture: Getty
பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் வித்தியாசம்
உயிர் பிரியும் தருணத்தில், பெரியர்கள் பார்க்கும் விடயங்களுக்கும், சிறுவர்கள் பார்க்கும் அல்லது கற்பனை செய்யும் விடயங்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்கிறார் கிறிஸ்டோபர்.
பெரியவர்கள், தங்கள் வாழ்வில் முன்னர் நிகழ்ந்த அனுபவங்களை , குறிப்பாக, தாங்கள் வாழ்வில் சந்தித்த இனிமையான தருணங்களின் பின்னணியிலிருந்தவர்களைக் குறித்து நேர்மறையான எண்ணம் கொள்வதாக தெரிவிக்கிறார் கிறிஸ்டோபர்.
ஆனால், சில நேரங்களில் தங்கள் உயிர் பிரியும்போது, அந்த குறிப்பிட்ட நபர், பிறர் செய்த தவறுகளை, குற்றங்களை மன்னிப்பது போன்ற எண்ணங்களை கற்பனை செய்துபார்ப்பதுண்டு என்கிறார் அவர்.
தன் வாழ்வில் போர் ஒன்றில் பங்கேற்ற ஒருவர், வாழும்போது, மரணத்தையும், இரத்தத்தையும், அலறல் சத்தங்களையும், போரில் சிதறிக்கிடந்த உடல் பாகங்களையும் கண்டு, தூங்க முடியாமல் தவித்துவந்ததாகவும், ஆனால், அவரது உயிர் பிரியும்போது, அவர் தூக்கத்துக்குச் சென்று அப்படியே அமைதியாக இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார் கிறிஸ்டோபர்.
Picture: Getty
குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள்?
குழந்தைகளின் மரணம் வித்தியாசமானது என்கிறார் கிறிஸ்டோபர். பெரும்பாலும், அவர்கள் பயமில்லாமல், அமைதியாக மரணிப்பதாகத் தெரிவிக்கிறார் அவர்.
குழந்தைகளைப் பொருத்தவரை, பொதுவாக அவர்கள் வாழ்வில் தங்கள் அன்பிற்குரிய ஒருவரை இழந்ததற்கான வாய்ப்பு குறைவே என்பதால், தாங்கள் வளர்த்த ஒரு செல்லப்பிராணி அல்லது ஒரு கற்பனை பிராணியை கற்பனை செய்து, தாங்கள் தனியாக இல்லை என்று எண்ணிக்கொள்கிறார்களாம்.
Picture: Getty
ஒரு சிறுமி உயிரிழக்கும்போது அவள் அருகிலிருந்த கிறிஸ்டோபர், அவள், தானாகவே ஒரு அரண்மனையில் வாழ்வதாக கற்பனை செய்துகொண்டதை நினைவுகூர்கிறார். அங்கே என்ன இருக்கிறது என அவர் கேட்க, அங்கே ஒரு நீச்சல் குளமும், சில செல்லப்பிராணிகளும்,ஒரு பியானோவும் இருப்பதாகத் தெரிவித்தாளாம் அந்தச் சிறுமி. அந்த அரண்மனையிலிருந்த ஒரு ஜன்னல் வழியாக வெளிச்சம் அறைக்குள் வந்ததாக அவள் கூற, அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டாராம் கிறிஸ்டோபர். அதற்கு அந்தச் சிறுமி, அது ஒரு பாதுகாப்பான இடம் என்றாளாம்!
Picture: Getty
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |