இளம்பெண்ணின் ஒப்புதல் இல்லாமல் ஒன்லைனில் மருத்துவர் செய்த செயல்: பிரான்சில் எழுந்துள்ள சர்ச்சை
ஒரு நோயாளியின் ஒப்புதல் இல்லாமல் அவர் குறித்த விடயங்கள் எதையும் மூன்றாம் தரப்பினருக்கு வெளியிடக்கூடாது என்ற விதி நடைமுறையிலிருக்கும் நிலையில், கையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஒரு பெண்ணின் எக்ஸ் ரேயை, ஒன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளார் பிரெஞ்சு மருத்துவர் ஒருவர்.
இந்த விடயம் பிரான்சில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில், அந்த மருத்துவரின் செயல் வெட்கத்துக்குரியது என மக்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
பாரீஸிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வரும் மூத்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணரான Emmanuel Masmejean என்பவர்தான் இந்த மோசமான செயலைச் செய்தவர் ஆவார்.
அதுவும், குறிப்பாக அந்த நோயாளி யார் என்றால், 2015ஆம் ஆண்டு, பாரீஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, Bataclan music hall என்னும் அரங்கில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துகொண்டிருந்தபோது, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஒருவரின் காதலி ஆவார். 130 பேர் கொல்லப்பட்ட அந்த பயங்கர நிகழ்வின்போது தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டின்போது காயமடைந்த பெண் அவர்.
A surgeon in Paris selling his X-ray radio from her patient who lost her boyfriend in the Bataclan terrorist attack. People are shameless.https://t.co/LVMpFRx2In pic.twitter.com/z78FsVpfOl
— Julien Bouteloup - bneiluj.eth (@bneiluj) January 23, 2022
அந்தப் பெண்ணின் கையில் துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்த நிலையில், அவர் உட்பட ஐந்து பெண்களுக்கு, தான் சிகிச்சையளித்ததாக குறிப்பிட்டுள்ள Masmejean, அந்த எக்ஸ் ரேயை விற்பனைக்கு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தான் அந்த நோயாளியின் ஒப்புதலின்றி அந்த படத்தை விற்பனைக்கு வைத்ததற்காக வருந்துவதாகவும், தற்போது அந்த படத்தை அகற்றிவிட்டதாகவும் Masmejean தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கை மருத்துவ தொழிலுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ள பாரீஸ் பொது மருத்துவமனைகள் அமைப்பின் தலைவரான Martin Hirsch, Masmejean மீது குற்றவியல் மற்றும் துறை ரீதியான புகாரளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.