மாரிமுத்து இதை செய்யாமல் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்! மருத்துவர் பேட்டி
நடிகர் மாரிமுத்து இதை செய்யாமல் இருந்திருந்தால் இறந்திருக்கமாட்டார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரிமுத்துவின் மரணம்
நடிகர் மாரிமுத்து நேற்று காலை சீரியலுக்கு டப்பிங் செய்து கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.இதனால் உதவிக்கு அங்கிருந்தவர்களை அழைக்காமல் தானே கார் ஓட்டிக்கொண்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் அதற்க்கு முன்பாகவே மாரிமுத்துவின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.மருத்துவமனையின் பார்கிங்லயே மயங்கி விழுந்த அவரை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவர்களிடம் காட்டியுள்ளனர்.
மேலும் கார்ஓட்டி கொண்டு வந்தபோதே அவரது மனைவிக்கு போன் செய்து ''தனக்கு ஏதோ செய்வதுபோல் உள்ளது எனக்கூறி காவேரி மருத்துவமனைக்கு செல்லலாம்'' எனவும் கூறியதாக கூறியப்படுகிறது.
ஆனால் டப்பிங் ஸ்டூடியோவிலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் கரை ஓட்டி வருவதற்குள் அவரது நிலை மோசமாகி வாயில் நுரை தள்ளி உயிரழந்துள்ளார்.
மருத்துவர் கூறியதாவது
மாரிமுத்துவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ''மாரிமுத்துவின் பழைய மெடிக்கல் ரெக்கார்டின் படி இரண்டு முறை அட்டாக் வந்திருக்கிறது. ரத்தக்குழாயில் அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக்ஸ் செய்திருக்கிறார்கள் மேலும், சர்க்கரை வியாதியும் உள்ளதால் அதற்காகவும் அவர் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.
இப்படி, ஏற்கனவே இரண்டு முறை அட்டாக் வந்தவர்கள் பொதுவாக மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர் செய்த மிகப்பெரிய தவறு, நெஞ்சு வலி இருக்கிறது என்பதை அறிந்த பின்னரும், அவரே காரை ஓட்டி வந்தது தான். ஒரு வேலை அவர் உதவியாளரையோ அல்லது பக்கத்தில் இருப்பவர்களையோ உதவிக்கு அழைத்து இருந்தால், அவரை காப்பாற்றி இருக்க முடியும்” என கூறியுள்ளார்.
பொதுவாக நடப்பது, ஓடுவது, கார் ஓட்டுவது போன்ற செயல்கள் இதயத்திற்கு அதிக பாதிப்பைத் தரும். நெஞ்சுவலி இருந்த நிலையில், அவரே காரை ஓட்டி வந்தது, அவரது இதய பாதிப்பை மேலும் அதிகமாக்கியிருக்கிறது என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |