Covishield Vaccine உயிருக்கு ஆபத்தானதா? மருத்துவர் கூறும் விளக்கம்
சீன நாட்டில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதுமாக பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தைச் சேர்ந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாக்கான தடுப்பூசியை உருவாக்கின.
இந்த தடுப்பூசியானது Covishield என்ற பெயரில் விநியோகம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு போடப்பட்டது.
இந்தியாவில் சுமார் 175 கோடிக்கும் அதிகமாக கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
தற்போது, Covishield தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என அஸ்ட்ராஜெனகா நிறுவனம் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையில், Covishield Vaccine போட்டவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று மருத்துவர் சபரிநாத் பகிர்ந்துள்ளார்.
மருத்துவரின் கூற்று
அவர் கூறியதாவது, அனைத்திற்கும் ஏற்படும் பக்கவிளைவுகள் போல இதற்கும் சில அரிதான பக்கவிளைவுகள் ஏற்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த பக்கவிளைவுகள் பெயர் Thrombotic Thrombocytopenia Purpura (TTP) அல்லது Thrombosis Thrombocytopenia Syndrome (TTS) ஆகும்.
இதில் Thrombotic என்பது இரத்தக்கட்டுக்கள் ஆகும். Thrombocytopenia என்பது குறைந்த இரத்த தட்டுகளின் எண்ணிக்கை ஆகும்.
இதற்கு அர்த்தம் இரத்தக்கட்டுக்கள் அதிகமாகி இரத்த தட்டுகளின் எண்ணிக்கை குறையக்கூடிய ஒரு பக்கவிளைவு உண்டாகின்றன.
ஆனால் இந்த பக்கவிளைவுகள் மிக அரிதாக அதாவது லட்சங்களில் ஒருவருக்கு தான் ஏற்படுகின்றன.
இந்த பக்கவிளைவுனினால் ஏற்படும் இரத்தக்கட்டுக்கள் இருதயத்தில் ஏற்பட்டால் மாரடைப்பு வருகிறது. மேலும் இரத்தத்தட்டுக்கள் மூலையில் ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படுகின்றன.
அதைத்தவிர்த்து, கை கால்களில் இந்த இரத்தத்தட்டுக்கள் ஏற்பட்டால் கை, கால்கள் வீக்கம் அடையும் என்று அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அனைத்திலுமே பக்கவிளைவுகள் என்பது ஒன்று உண்டு. Covishield-லும் ஏற்படும் பக்கவிளைவுகள் என்பது ஒரு அரிதான ஒன்று.
பக்கவிளைவுகளுக்காக Vaccine போடாமல் விட்டால் பல வைரஸ்களால் பலரும் பாதிக்கப்படுவார்கள்.
கொரோன காலகட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என பலரும் கொரோனா பாதிப்பால் உயிழந்தனர்.
Covishield போட்டுக்கொண்டதால்தான் நம்மால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடிந்தது.
அரிதாக ஏற்படும் பக்கவிளைவுகளை கண்டு வைரஸ்களுக்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருந்திருந்தால் கொரோனா காலகட்டத்தில் பல உயிரிழப்புகளை நாம் சந்தித்திருப்போம் என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |