மொத்த குடும்பமும் உயிரிழந்த சோகம்: நடந்தது என்ன?
சென்னையில் 5 கோடி ரூபாய் கடன் தொல்லை காரணமாக மருத்துவர் உள்பட 4 பேர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 பேர் உயிரிழப்பு
சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் பாலமுருகன் (52). இவருடைய மனைவி சுமதி (47) வழக்கறிஞராக இருந்தார். இவருக்கு ஜஸ்வந்த் (19) மற்றும் லிங்கேஷ் குமார் (17) என்று இரு மகன்கள் இருந்தனர்.
இந்நிலையில், மருத்துவர் பால முருகனுக்கு 5 கோடி ரூபாய் அளவிற்கு கடன் தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கடன் தொல்லை காரணமாக மருத்துவர், அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் ஆகிய 4 பேரும் வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல் அறிந்த பொலிஸார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், கந்து வட்டி தொல்லை இருந்ததா என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |