உடல் பருமன் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும்: மருத்துவர்களின் எச்சரிக்கை
அதிக உடல் பருமன் கல்லீரல் புற்றுநோயை உண்டாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
போதிய விழிப்புணர்வு மற்றும் மருத்துவ கண்காணிப்பு மூலம் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மெடிந்தியா மருத்துவமனை சார்பில் ''ஜி.இ.கான்-23'' என்ற ஜீரண மண்டல மருத்துவ மாநாடு நடைபெற்றது.
மருத்துவரின் எச்சரிக்கை
அதில் உலக உயர் ரத்த அழுத்த அமைப்பின்(WHL) துணைத்தலைவர் டாக்டர் S.N நரசிங்கம், ''உடல்பருமனும் கல்லீரலும்'' என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார்.
2020 explode/shutterstock
குடல் -இரைப்பை சார்ந்த நோய்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மதுப்பழக்கம் இல்லாத பலருக்கும் கல்லீரல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன.அதற்கு காரணம் உடல் பருமன்.
குறிப்பாக கல்லீரல் வீக்கத்துக்கு 40-50 சதவீதம் உடல் பருமனே காரணமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக அது கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் சுருக்கத்தை ஏற்படுத்துகிறது.
istock
அதைக் கவனிக்க தவறினால் ஒரு கட்டத்தில் கல்லீரல் புற்றுநோயாக மாறக்கூடும். உரிய விழிப்புணர்வு இருந்தால் அதனை முன்கூட்டியே தடுக்கலாம் என்று அவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |