மாதவிடாய் வயிற்று வலி நீங்க சில வீட்டு வைத்தியம்- மருத்துவரின் கூற்று
மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு வலியையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.
அதேபோல், மாதவிடாயின் போது இடுப்பு, தொடை, மார்பு பகுதி என உடலின் பல்வேறு இடங்களில் வலி ஏற்படும். அடிவயிற்றுப் பகுதியில் பிடிப்புகளும் அதிகமாக இருக்கும்.
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இந்த வலிகளை சில வீட்டு வைத்தியம் மூலம் நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
அந்தவகையில், மாதவிடாயின் போது வலிகளை குறைக்க என்ன செய்வது என்றும், வலிகளை குறைக்கும் உணவுகள் பற்றியும் மருத்துவர் கார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.
மருத்துவரின் கூற்று
மாதவிடாய் காலத்தில் வலி இருந்தால் தான் கர்ப்பப்பை அதன் வேலையே சரியாக செய்து கருமுட்டை சரியாக வெளியேறுகிறது என்று அர்த்தம் என்கிறார்.
வலிகளை குறைக்க வயிற்றில் விளக்கெண்ணெய் வைத்து வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். இதனால் மாதவிடாயின் போது வலிகள் குறைகின்றன.
அடுத்து வெதுவெதுப்பான நீரை பேக்கில் நிரப்பி வயிற்று பகுதியில் வைத்தல் மாதவிடாய் வலிகள் குறையும்.
மேலும், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்வதாலும் மாதைவிடாய் வலிகள் குறையும். மேலும் அசௌகரியத்திலிருந்து வெளிவர உதவுகிறது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்.
- உப்பு சத்து அதிகம் உள்ள உணவுகள்.
- காஃபைன் நிறைந்த காபி.
மாதவிடாயின் போது இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் இன்னும் வலிகளை அதிகப்படுத்தும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்
- இஞ்சி
- பப்பாளி
- பாதம்
- பூசணி விதைகள்
- மீன்
- பச்சை காய்கறிகள்
- ஆளி விதை
- கொண்டக்கடலை
- வாழைப்பழம்
- அவகோடா
- தர்பூசணி
- வெள்ளரிக்காய்
- திராட்சை
- ஸ்ட்ராபெர்ரி
- பால்
மாதவிடாயின் போது இந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் அதன் வலிகளை நீக்க உதவும். மேலும், அடிவயிற்றுப் பகுதியில் பிடிப்புகளும் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |