பிரித்தானியாவில் வேகமாக பரவும் வைரஸ் தொற்று...வேலைநிறுத்தம் செய்ய மருத்துவர்கள் திட்டம்: பிரதமர் கோரிக்கை
பிரித்தானியாவில் ப்ளூ தொற்று வேகமாக பரவிவரும் நேரத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளது பொறுப்பற்ற செயல் என்று கூறியுள்ளார் பிரதமர்.
வேலைநிறுத்தம் செய்ய திட்டம்
பிரித்தானியாவில் ப்ளூ தொற்று வேகமாகப் பரவிவருகிறது. கடந்த வாரத்தில், நாளொன்றிற்கு சராசரியாக 2,660 நோயாளிகள் ப்ளூ தொற்று காரணமாக மருத்துவமனைகளுக்கு வந்துள்ளார்கள்.
முந்தைய வாரத்தை ஒப்பிடும்போது, இது 55 சதவிகிதம் அதிகமாகும். இப்படிப்பட்ட சூழலில், அடுத்த வாரத்திலிருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட பிரித்தானிய மருத்துவர்கள் திட்டமிட்டுவருகிறார்கள்.

Alamy
இந்நிலையில், பிரித்தானிய சுகாதார அமைப்பான NHS அபாயகரமான நிலையில் இருக்கும்போது மருத்துவர்கள் வேலைநிறுத்தத்துக்கு திட்டமிடுவது பொறுப்பற்ற செயல் என்று கூறியுள்ளார் பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர்.
அரசு முன்வைத்துள்ள ஆஃபரை ஏற்றுக்கொண்டு, வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு அவர் மருத்துவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அல்லது, குறைந்தபட்சம் வேலைநிறுத்த திட்டத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பின் தள்ளிவைக்கவாவது செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.