முகப்பருக்களை நிரந்தரமாக நீக்க இதை மட்டும் செய்தாலே போதும்- மருத்துவரின் கூற்று
பல பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முகப்பரு தான்.
என்னதான் நம் முகம் கலராகவும் பொலிவாகவும் இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.
முகப்பருக்களை அகற்றி சரும பொலிவிற்கு தீர்வு காண மருத்துவர் ஷர்மிகா சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.
மருத்துவரின் கூற்று
அதிகப்படியான எண்ணெய் உணவுகளை எடுத்துக்கொள்வதால் முகப்பருக்கள் அதிகம் வருகின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை பயன்படுத்துவதற்கு பதிலாக செக்கில் ஆட்டிய எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றில் உணவு சமைத்து சாப்பிடலாம்.
குறைந்தது ஒரு நாளைக்கு 4 - 5 முறை முகத்தை கழுவ வேண்டும்.
உடல் வெப்பமடைவதால் தோலில் குட்டி குட்டியான பருக்கள் உண்டாகின்றன. முகப்பருக்களை கிள்ளி விடுவதால் அந்த இடத்தில் கரும்புள்ளிகள் தோன்றுகின்றன.
முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை ஆவராம்பூ பொடி மற்றும் குப்பை மேனி பொடி கலந்து விடியற்காலையில் 5.30 மணிக்குள் தேனில் கலந்து குடித்து வரலாம்.
தினமும் காலையில் 4 ஸ்பூன் உருக்கிய நெய்யை சாப்பிட்டு பின் வெதுவெதுப்பான நீர் அருந்தி உடற்பயிற்சி செய்து வருவதால் முகம் மென்மையாக மாறிவிடும்.
முகப்பரு நிரந்தரமாக அகற்ற வெள்ளரிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் தொடர்ந்து குடித்து வர வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |