இந்தியா இலங்கை மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து அதிக அளவில் பிரித்தானியாவுக்கு பணிக்கு வரும் மருத்துவர்கள்: ஆனால்...

Sri Lanka United Kingdom India
By Balamanuvelan Aug 05, 2022 08:30 AM GMT
Report

இங்கிலாந்து அரசு மருத்துவமனைகள், பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களையே அதிக அளவில் சார்ந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியே இருந்து வரும் மருத்துவர்களின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 18 சதவிகிதமாக இருந்தது கடந்த ஆண்டில் 34 சதவிகிதமாகவும், செவிலியர்களின் எண்ணிக்கை 7 சதவிகிதத்திலிருந்து 34 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பிரெக்சிட்டுக்குப் பிறகு, ஐரோப்பாவிலிருந்து பிரித்தானியாவுக்கு பணிக்கு வருபவர்களைப் பார்க்க முடியவில்லை என்று கூறும் நார்ஃபோக் மற்றும் நார்விச் பல்கலை மருத்துவமனைகளில் histopathologistஆக பணியாற்றும் Dr Alexia Tsigka, எங்கள் மருத்துவமனைகளைப் பொருத்தவரை அதிக அளவில், இந்தியா, எகிப்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்துதான் மருத்துவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்கிறார்.

இந்தியா இலங்கை மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து அதிக அளவில் பிரித்தானியாவுக்கு பணிக்கு வரும் மருத்துவர்கள்: ஆனால்... | Doctors Coming To Uk

GETTY IMAGES 

ஆனால், இந்த விடயம் அத்துடன் முடியவில்லை. பிரச்சினை என்னவென்றால், அப்படி பணிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பிரித்தானியாவிலிருந்து வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.

பிரித்தானிய அரசு மருத்துவமனைகளிலிருந்து வெளியேறும் மருத்துவர்களின் எண்ணிக்கை 2015இல் 15 சதவிகிதமாக இருந்தது, 2021இல் 25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அதற்கு, கடுமையான பணிச்சுமை மற்றும் விசாவுக்கான கட்டணம் ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன.

மருத்துவ பட்டதாரிகள் பிரித்தானியாவிலேயே தொடர்ந்து வாழ்வதற்கு மற்றும் பணி செய்வதற்கான அனுமதி பெறுவதற்காக, ஆளுக்கு 2,400 பவுண்டுகளும், அவர்களுடைய குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு 2,400 பவுண்டுகளும் செலுத்தவேண்டியுள்ளதாம்.

பிரித்தானியாவின் சர்ரேயிலுள்ள அரசு மருத்துவமனையில் 18 ஆண்டுகள் பணி செய்த Dr Hajra Usmani, தனது வயதான பெற்றோரை இங்கிலாந்துக்கு அழைத்து வர திட்டமிட்டிருக்கிறார். ஆனால், விசா செலவைப் பார்த்து அந்த திட்டத்தையே கைவிட்ட Dr Hajra, பிரித்தானியாவை விட்டே வெளியேறிவிட்டார். தற்போது அவரும் அவரது குடும்பமும் சவுதி அரேபியாவில் வாழ்கிறார்கள்.

இந்தியா இலங்கை மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து அதிக அளவில் பிரித்தானியாவுக்கு பணிக்கு வரும் மருத்துவர்கள்: ஆனால்... | Doctors Coming To Uk

image - SUMAIRA BABAR 

மருத்துவர்களுக்கே இந்த நிலை என்றால், சாதாரண பணி செய்வோரின் நிலை எப்படியிருக்கும்?

பல நாடுகள் வெளிநாட்டவர்களை பணிக்கு அழைக்கின்றன. ஆனால், பணிக்கு வந்தவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவை போதுமான முயற்சிகள் எடுக்கின்றனவா என்றால், அந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலில்லை.

ஆனால், அரசு மருத்துவ அமைப்பைச் சார்ந்த செய்தித்தொடர்பாளர் ஒருவரிடம் இது குறித்துக் கேள்வி எழுப்பியபோது, பிரித்தானியாவை விட்டு மருத்துவத்துறையினர் வெளியேறுவதற்கு கடுமையான மொழித்தேர்வுகள் காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளதுடன், புலம்பெயர்தல் கட்டுப்பாடுகள்தான் அதற்குக் காரணம் என்பதை தான் மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  

இந்தியா இலங்கை மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து அதிக அளவில் பிரித்தானியாவுக்கு பணிக்கு வரும் மருத்துவர்கள்: ஆனால்... | Doctors Coming To Uk

image - DR HAJRA USMANI 

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US