தடுப்பூசி போட்டால் ஆட்டிசம் பாதிப்பா? ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
ஸ்ரீதர் வேம்பு தடுப்பூசி குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீதர் வேம்பு
Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தடுப்பூசி செலுத்துவதால் ஆட்டிசம் பாதிப்பு ஏற்படும் என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மெக்கல்லக் ஃபவுண்டேஷன் (McCullough Foundation) வெளியிட்ட ஆய்வு பதிவை ஒன்றை பகிர்ந்த அவர், "பெற்றோர்கள் இந்த ஆய்வை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
Parents should take this analysis seriously. I believe there is increasing evidence that we are giving way too many vaccines to very young children. This is spreading in India too and we are seeing a rapid increase in autism in India. https://t.co/AeiVaieYug
— Sridhar Vembu (@svembu) October 28, 2025
மிகச் சிறிய குழந்தைகளுக்கு நாம் அதிகப்படியான தடுப்பூசிகள் கொடுப்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருவதாக நம்புகிறேன். இது இந்தியாவிலும் பரவி வருகிறது, மேலும் இந்தியாவில் ஆட்டிசம் வேகமாக அதிகரித்து வருவதைக் காண்கிறோம்" எனக்கூறியுள்ளார்.
அவரின் பதிவுக்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
வலுக்கும் எதிர்ப்பு
கேரளாவை சேர்ந்த பிரபல கல்லீரல் மருத்துவரான சிரியாக் அபி பிலிப்ஸ், "பெற்றோர்களும் பொதுமக்களும் தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை நிறுத்திவிட வேண்டாம்.
For the public and patients, please do not stop vaccinating your children. You don't want polio to come back. You don't want measles to kill your child like it is doing in the US because boomer uncles in charge of US Health Departments have become anti science.
— TheLiverDoc™ (@theliverdr) October 28, 2025
The conclusions… https://t.co/PsCaeYQmw8 pic.twitter.com/RQM7dnIKBi
உங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்காவில் இருப்பது போல போலியோவோ, தட்டம்மையோ வர வேண்டாம்" என ஸ்ரீதர் வேம்புவின் எக்ஸ் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த ஆய்வு கட்டுரையை எழுதிய மருத்துவர் ஆண்ட்ரூ வேக்ஃபீல்ட், 1998 ஆம் ஆண்டு ஆய்வில் MMR தடுப்பூசியை ஆட்டிசத்துடன் தவறாக இணைத்து எழுதியது கண்டறியப்பட்டது.
அதேவேளையில், ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இது போல் கர்ப்பிணிகள் பாராசிட்டமால் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் பாதிப்பு அதிகரிக்கும், கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமாலை தவிர்க்க வேண்டும் என பேசினார்.
அவரின் பேச்சுக்கு உலக சுகாதார நிறுவனம்(WHO) உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |