மோசமடைந்த விஜயகாந்தின் உடல்நிலை: தீவிர சிகிச்சை வழங்கப்படுவதாக தகவல்
நடிகர் விஜயகாந்திற்கு தொடர்ந்து தீவிர் சிகிச்சையை அளிக்கவுள்ளதாக மியாட் மருத்துவமனை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் உள்ள கேப்டன் விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்திருந்த நிலையில், கடந்த 18 ஆம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சளி மற்றும் தொண்டை வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
இவரது உடல் நிலை குறித்து வைத்தியசாலையில் இருந்து அவ்வப்போது அறிக்கைகளும் வெளியிடப்படிருந்தன.
முதல் கட்ட சிகிச்சையில் இவருக்கு நுரையீரலில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. அதிக அளவில் சளி தேங்கிய காரணத்தினாலேயே விஜயகாந்த் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டுள்ளார்.
பின் மாத்திரைகள் வழங்கப்பட்ட பின்னர் உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. எனினும் மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட வைத்தியசாலையானது, விஜயகாந்த்துக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை தேவைப்படுவதாகவும், எனவே 14 நாட்கள் வரையில் அவர் சிகிச்சை பெற வேண்டியுள்ள தேவை இருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து விஜயகாந்துக்கு வெண்டிலேட்டர் மூலமாக கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீண்டும் வைத்தியர்கள் தீவிர சிகிச்சையில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இவர் முழுவதுமாக குணமடைந்தவுடனே வீட்டிற்கு அழைத்து செல்வோம் என குடும்பத்தினரும் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |