ஆல்பர்ட்டா மாகாண மக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் தட்டம்மை பரவல் காணப்படுவது தொடர்பில் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டம்மை பரவல்
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி, 1,179 பேருக்கு தட்டம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆல்பர்ட்டாவில் Calgary Stampede என்னும் விழா துவங்கியுள்ள நிலையில், தட்டம்மை பரவல் தொடர்பில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.3 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தட்டம்மை எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் என்பதால், Calgary Stampede போன்ற விழாக்களில் பங்கேற்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளோருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது.
ஆகவே, சிறுபிள்ளைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், தடுப்பூசி பெறாதவர்கள் ஆகியோர் கூட்டமான இடங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மேலும், தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |