முகப்பருவை தடுக்க தமன்னா சொன்ன டிப்ஸ் - மருத்துவர்கள் விடுத்த எச்சரிக்கை
முகப்பருவை தடுக்க தமன்னா சொன்ன டிப்ஸில் உள்ள ஆபத்து குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமன்னா முகப்பரு டிப்ஸ்
தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை தமன்னா, தற்போது ஹிந்தி படங்களிலும் நடித்து இந்திய அளவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில், யூ டியூப் சேனல் ஒன்றுக்கு தமன்னா அளித்த பேட்டியில், "என் முகத்தில் முகப்பரு வரும் போதெல்லாம் வேறு எந்த சிகிச்சையையும் நான் எடுத்துக் கொள்வதில்லை.
காலையில் பல் விளக்குவதற்கு முன், வாயில் இருக்கும் உமிழ்நீரை பரு மீது தொட்டு வைத்தால் அது சரியாகி விடும். உங்கள் உடல் உங்கள் வாயில் போதுமான பாக்டீரியா எதிர்ப்பு கூறுகளை உருவாக்கியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் எச்சரிக்கை
ஆனால், தோல் மருத்துவர்கள் முகப்பருவின் மீது உமிழ்நீரை தடவுவதில் உள்ள ஆபத்துகள் குறித்து எச்சரித்துள்ளனர்.
உமிழ்நீரை முகப்பருவின் மீது தடவுவது பயனளிக்கும் என எந்த மருத்துவ ஆய்வு முடிவுகளும் இல்லை. பிரபலங்கள் சொல்கிறார்கள் என்பதால் அதனை பின்பற்ற வேண்டாம்.
உமிழ்நீர் நமது வாயில் இருந்து வந்தாலும், அது கிருமியற்றது என்ற எண்ணம் தவறானது. சருமத்தில் வெடிப்புகள் இருக்கும்போது, மேல் தோல் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும்.
உமிழ்நீரை அத்தகைய பாதிக்கப்பட்ட தோலில் தடவுவது நோய்க் கிருமிகளை சருமத்தின் உட்புற அடுக்குகளுக்குள் செலுத்தி, தொற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடும். உமிழ்நீரில் உள்ள என்சைம்களின் அமிலத்தன்மை கொண்ட pH, தோலில் எரிச்சல் அல்லது வறட்சியை ஏற்படுத்தலாம். என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |