நீட் விடைத்தாள் கிழிந்ததாக புகார் கொடுத்த மாணவி.., நீதிமன்றத்தில் அம்பலமான உண்மை ஆதாரம்
நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாக கூறி தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று மாணவி ஒருவர் புகார் அளித்திருந்தார்.
போலி ஆவணங்கள் அம்பலம்
தன்னுடைய நீட் விடைத்தாள் கிழிந்துவிட்டதாக கூறி தனக்கான தேர்வு முடிவு முறையாக அறிவிக்கப்படவில்லை என்று மாணவி ஆயுஷி படேல் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அப்போது அதற்கான ஆவணங்களை இணைத்து தன்னுடைய விடைத்தாளை கணினி மூலம் இல்லாமல் கைப்பட திருத்த வேண்டும் என்று தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.
பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து ஆயுஷி படேலின் நீட் விடைத்தாளை நீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை சமர்ப்பித்தது. அப்போது, மாணவியின் விடைத்தாள் எந்தவொரு சேதாரமும் இல்லாமல் இருந்தது.
அப்போது தான் மாணவி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்பது தெரியவந்தது. பின்னர், மாணவி மீது தேசிய தேர்வு முகமை நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால், மாணவி தரப்பு வழக்கறிஞர் மனுவை திரும்ப பெறுவதாக கூறிய நிலையில் நீதிபதி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.
சில வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சில மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி தேசிய அளவில் தீவிரப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே தான், நீட் தேர்வு எழுதிய மாணவி ஆயுஷி படேல், தன்னுடைய விடைத் தாள் கிழிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தன்னுடைய பக்கத்திலும் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |