ஜேர்மன் குடியுரிமை: முக்கியமான ஆவணங்கள் குறித்த சில பயனுள்ள தகவல்கள்
ஜேர்மனியில் புதிய குடியுரிமை சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், பலரும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கத் தயாராகிவருகிறார்கள்.
நீங்கள் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்தபின் உங்களுக்கு என்னென்ன ஆவணங்கள் கொடுக்கப்படும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
குடியுரிமை சான்றிதழ்
நீங்கள் குடியுரிமைக்கு விண்ணப்பித்ததும், உங்களுக்குக் கிடைக்கும் முதல் ஆவணம், நீங்கள் ஒரு ஜேர்மன் குடிமகன்/குடிமகள் என்பதை நிரூபிக்கும் குடியுரிமை சான்றிதழ் ஆகும்.
ஆனால், இது ஒரு செல்லத்தக்க அடையாள அட்டை அல்ல.
என்றாலும், நீங்கள் ஜேர்மன் அடையாள அட்டைக்கும், பாஸ்போர்ட்டுக்கும் விண்ணப்பிப்பதற்கு இந்த குடியுரிமை சான்றிதழ் அவசியமாகும்.
ஜேர்மன் பாஸ்போர்ட்
ஜேர்மன் பாஸ்போர்ட் என்பது, நீங்கள் ஜேர்மனிக்குள் எந்த கட்டுப்பாடுகளுமின்றி கால்வைக்க உதவும் ஆவணமாகும்.
அத்துடன், இதுவும் நீங்கள் ஒரு ஒரு ஜேர்மன் குடிமகன்/குடிமகள் என்பதை நிரூபிக்கும் ஆவணம் ஆகும்.
மேலும், நீங்கள் ஒரு குடிமகன்/குடிமகள் என்றால், நீங்கள் ஜேர்மனிக்குள் கால்வைக்கும்போது, நீங்கள் வேறு நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தாலும்கூட, ஜேர்மன் பாஸ்போர்ட்டுடன் வர கடமைப்பட்டுள்ளீர்கள்.
ஜேர்மன் அடையாள அட்டை
ஜேர்மன் அடையாள அட்டை வைத்திருப்பது, நீங்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பே நடக்கும் ஒரு நல்ல முதல் படியாகும்.
இது, ஜேர்மனிக்குள்ளும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் உங்கள் அடையாளத்தை உறுதி செய்வதுடன், ஒன்லைன் அடையாள தேவைகளுக்கும் உதவியாக இருக்கும்.
அத்துடன், ஜேர்மனியில் பணி செய்ய அடையாள அட்டையாகவும் இது பயன்படும். பாஸ்போர்ட்டும் இந்த தேவைகளுக்கு பயன்படும் என்றாலும், இதை எளிதில் பர்ஸில் வைத்துக்கொள்ளமுடியும் என்பது கூடுதல் வசதி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |