எறும்பின் உடலில் ரத்தம் இருக்கிறதா?
எறும்புகளின் உடலில் இரத்தத்தை ஒத்த மஞ்சல்/பச்சை நிறமான ஹீமோலிம்ப் என்று அழைக்கப்படும் ( haemolymph )ஒருவகை திரவம் உண்டு.
முள்ளந்தண்டு உள்ள விலங்குகளில் இரத்தம் ஆற்றும் முக்கியமான வேலை போசனைப்பொருட்கள்,ஒட்சிசன்,கழிவுப்பொருட்கள் என்பவற்றை தேவையான இடங்களுக்கு நகர்த்துவதாகும்.
எமது இரத்தத்தில் உள்ள செங்குருதி சிறுதுணிக்கைகளே குருதிக்கு செந்நிறத்தை கொடுக்கின்றன,அவை ஒட்சிசனை உடம்பிலுள்ள எல்லா கலங்களுக்கு காவிச்செல்கின்றன.
ஹீமோலிம்ப் எனப்படும் திரவமும் எரும்பின் உடம்பில் இதேபோன்ற பணியை செய்கின்றது.ஆனால் ஒட்சிசனை கடத்துவதில்லை.ஹீமோலிம்ப் எனும் திரவம் எரும்பின் உடம்பின் பெரும்பகுதியில் நிறைந்து காணப்படுகின்றது.அது நாடியினாலோ நாளங்களினாலோ கொண்டுசெல்லப்படுவதும் இல்லை.
எறும்பின் இதயத்தினால் ஏற்படுத்தப்படும் அழுத்தத்தினால் அதன் அங்கங்களுக்கு செலுத்தப்படுகின்றது.