பால் குடிப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா? ஆய்வு என்ன சொல்கிறது?
நம் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் மற்ற ஊட்டச்சத்துக்களும் பாலில் நிறைந்துள்ளன.
கால்சியம் நிறைந்த பால், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் வயதான காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது
இந்த பானத்தில் பாஸ்பரஸ், வைட்டமின்கள் ஏ மற்றும் பி12, பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் அயோடின் ஆகியவை நிறைந்துள்ளன.
பல நன்மைகள் நிறைந்துள்ள பாலை சிலர் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் என்று குடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். உண்மையில் பால் குடிப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா? இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
பால் குடிப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா?
சர்வதேச உடல் பருமன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி, பால் குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவுகளில் கணிசமான தாக்கம் ஏதுமில்லை.
ஒரு விரிவான ஆய்வுக்குப் பிறகு, பால் குடிப்பது உண்மையில் நல்ல மற்றும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும், தொடர்ந்து பால் உட்கொள்பவர்களுக்கு கரோனரி இதய நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 14 சதவீதம் குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மிதமான அளவு பால் உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்காது மற்றும் எடையையும் அதிகரிக்க வழிவகுக்காது.
இதய ஆரோக்கியத்திற்காக பால் உட்கொள்வதைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதை ஆய்வு கூறுகிறது. ஏனெனில் இது இதயத்தின் மீது குறைந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.