முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
பொதுவாக உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த முட்டை மிகவும் இன்றியமையானது.
ஏனெனில் முட்டையில் அதிக அளவில் சத்துக்களானது நிறைந்துள்ளது.
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் A, E மற்றும் B6 அதிகமாக உள்ளதால், இவை தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டத்தை அளிக்கிறது.
இருப்பினும் சிலருக்கு முட்டை சாப்பிடுவது கொலஸ்ரோலை அதிகரிக்குமா? இல்லையா என்ற சந்தேகம் காணப்படும். தற்போது அதனை பற்றி பார்ப்போம்
முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்பது உண்மையா?
முட்டையில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் நல்ல கொலஸ்ட்ரால் உள்ளது என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய கொலஸ்ட்ரால் நமது உடலில் ஆரோக்கியமான செல்களை உருவாக்குகிறது. இதில் நிறைவுற்ற அல்லது டிரான்ஸ் கொழுப்பு இல்லை, எனவே LDL அளவு அதாவது கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.
முட்டை சாப்பிடுவது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதால், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது.
, ஒரு நாளைக்கு 2 முட்டைகளை சாப்பிட்டால், அது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை விட அதிகமாக உட்கொள்ள விரும்பினால், மருத்துவரை அணுகவும். அதிக உடற்பயிற்சி செய்பவர்கள் முட்டைகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்றார்.