பப்பாளி சாப்பிட்டால் மாதவிடாய் விரைவில் வருமா?
ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் உள்ளது. ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும் வேறுபட்டது.
அதன் அறிகுறிகளும் வேறுபடுகின்றன. இருப்பினும் சில பெண்களுக்கு மாதவிடாய் தாமதமாக வரும்.
பெண்கள் பெரும்பாலும் இதைப் பற்றி கவலைப்படுவதுண்டு.
மாதவிடாய் சரியான நேரத்தில் வருவதற்கு பெண்கள் பல வீட்டு வைத்தியங்களை மேற்கொள்கின்றனர்.
அதில் ஒன்று பப்பாளி பழத்தை பச்சையாக சாப்பிடுவது.
பச்சை பப்பாளி சாப்பிடுவது மாதவிடாய் சீக்கிரம் வருவதற்கு உதவும் என்று நம்பப்படுகிறது.
இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பப்பாளி சாப்பிட்டால் மாதவிடாய் விரைவில் வருமா?
பப்பாளியில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டும் கரோட்டின் உள்ளது. இதன் காரணமாக மாதவிடாய் முன்கூட்டியே வரலாம்.
இது கருப்பையின் சுருக்கத்தை ஊக்குவிக்கிறது, இது மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவுகிறது.
அதாவது பப்பாளியில் வைட்டமின் சி உள்ளது, இது ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிக்கவும், உடலில் புரோஜெஸ்ட்டிரோனை குறைக்கவும் அறியப்படுகிறது. இது கருப்பையின் சுருக்கத்திற்கு உதவுகிறது.
நிபுணர்கள் கூறுவது என்ன?
உங்கள் மாதவிடாய் தாமதமானால் பயம் கொள்ள வேண்டாம். ஏனெனில் இது மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை வெளியிடுகிறது. இது உங்கள் மாதவிடாயை மேலும் தாமதப்படுத்தும்.
எந்தவொரு தீர்வையும் முயற்சிப்பதற்குப் பதிலாக நீங்கள் ஒரு மகளிர் மருத்துவ நிபுணரைத் தொடர்புகொள்வது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |